தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Neet : ’நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்.. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

Neet : ’நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்.. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

Divya Sekar HT Tamil
Sep 21, 2023 11:17 AM IST

நீட் தேர்வின் பலன் என்ன என்றால் 0 தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் 0 தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள் போதும் என்றாகி விட்டது.

NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்