தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tenkasi: கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது - உயர்நீதிமன்ற கிளை அதிரடி

Tenkasi: கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது - உயர்நீதிமன்ற கிளை அதிரடி

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 17, 2023 12:22 PM IST

அனைவரும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் ,காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில். இந்த கோவில் மிகவும் திருவேங்கடம் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ கோவிலாக வழிபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த கோவில் உயர் சாதியினருக்கு சொந்தமான கோவில் என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

எனவே இந்த வருடம் நாளை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை செய்த நீதிபதி கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது அனைவரும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் ,காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்