தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Government Collects Details On Implementation Of Old Pension Scheme

Old Pension Scheme:மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்? விவரங்களை கேட்கும் தமிழக அரசு!

Kathiravan V HT Tamil
Feb 28, 2023 08:39 PM IST

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புபடம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2004ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்கலின் விவர்னக்களை அனுப்பக்கோரி அனைத்துத்த்யுறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் “புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் தகவல்கள், நீதிமன்ற வழக்கு உள்ளிட்டவை குறித்து அரசு இறுதி முடிவெடுக்கம்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடயே கடந்த 2004ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என கடந்த தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point