தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sources: Tamil Nadu Bjp General Secretary Kesava Vinayagam Is To Be Replaced

Kesava Vinayakam: விரைவில் மாற்றப்படும் கேசவவிநாயகம்? அண்ணாமலைக்கு ரூட் க்ளியர்!

HT Tamil Desk HT Tamil
Mar 03, 2023 03:02 PM IST

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வரும் 12,13, 14 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில் பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெற உள்ளது

பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம்
பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜகவை பொறுத்தவரை அக்கட்சி பொறுப்புகளில் தலைமை கைக்காட்டக்கூடிய யாருக்கு வேண்டுமானாலும் கிடக்கும் என்ற நிலை உள்ள நிலையில் அதிகாரம் மிகுந்ததாக கருதப்படும் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே காலம்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

மாநில பாஜகவில் தலைவருக்கு நிகரான அதிகாரங்களை கொண்டவராக அமைப்பு செயலாளர் உள்ளார். கட்சியில் யாரை நீக்க வேண்டுமானாலும், யாரை சேர்க்க வேண்டுமானலும், எந்த முடிவுகளை எடுத்தாலும் மாநிலத் தலைவர் அமைப்பு செயலாளரை ஆலோசித்து அவரது ஒப்புதல் பெற்ற பிறகே முடிவெடுக்க முடியும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை   -கோப்பு படம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை -கோப்பு படம் (L. Anantha Krishnan)

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு கேசவவிநாயகத்துடன் கருத்து முரண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணமாக காட்டியே அக்கட்சியில் மாநில ஓபிசி அணியின் பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா கட்சியை விட்டு விலகினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை உடன் திருச்சி சூர்யா சிவா.
பாஜக தலைவர் அண்ணாமலை உடன் திருச்சி சூர்யா சிவா.

மேலும் அக்கட்சியின் சிறுபான்மை அணியை சேர்ந்த டெய்சியிடம் சூர்யா பேசிய ஆபாச ஆடியோவில் கேசவவிநாயகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசி இருந்தார். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய டெய்சியிடம் பாஜக அமைப்பு செயலாளரான கேசவவிநாயகம் குறித்து திருச்சி சூர்யா சிவா தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர் “கேசவவிநாயகம் முன் ஒரு பெண் ஆடைகள் இன்றி நின்றால் கூட திரும்பி பார்க்க மாட்டார்” என்று பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

டெய்சி, பாஜக சிறுபான்மையினர் அணி
டெய்சி, பாஜக சிறுபான்மையினர் அணி

இதனை தொடர்ந்து பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் மீது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வைக்கபட்டன. கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் மாற்றபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வரும் 12,13, 14 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில் பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் செயல்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்

இதன் படி தமிழ்நாடு பாஜகவின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் உள்ள கேசவ விநாயகம் மாற்றப்படு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழ்நாடு பிரிவின் மாநில செயலாளராக உள்ள பிரஷோப குமார் நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்