தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை: விஜயபாஸ்கர் பெயர் விவகாரம்; நீதிமன்றம் செல்வதென்ன?

ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை: விஜயபாஸ்கர் பெயர் விவகாரம்; நீதிமன்றம் செல்வதென்ன?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 01, 2023 01:23 PM IST

High Court-Madurai Bench:நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத் துறைச் செயலர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். இதனால் பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

ஆகவே, ஆறுமுகம் சாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளுக்கும் அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் நேற்று விசாரணையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த குறிப்புகள் வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வலியுறுத்தி அரசு தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டு ஆறு மாதம் கடந்து விட்டது. இனி இவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதில் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி, LK அத்வானி உச்சநீதிமன்ற பல்வேறு வழக்குகளை சுட்டிக் காட்டிய நீதிபதி நேற்று விதிக்கபட்ட இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத் துறைச் செயலர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்