தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  உண்மை கண்டறியும் சோதனை இப்படித்தான் நடக்குமா? - கலக்கத்தில் பிரபல ரவுடிகள்!

உண்மை கண்டறியும் சோதனை இப்படித்தான் நடக்குமா? - கலக்கத்தில் பிரபல ரவுடிகள்!

Karthikeyan S HT Tamil
Jan 19, 2023 01:42 PM IST

Ramajeyam Murder Case: தொழிலதிபர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பமாக உண்மை கண்டறியும் சோதனையில் நடந்தது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை - கோப்புபடம்
தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சென்னை சி.பி.ஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தது. அதன்படி, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக 12 பேரிடம் நேற்று முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உண்மை கண்டறியும் சோதனை என்றால் என்ன?

சந்தேகப்படும் நபரின் உடலில் சில கருவிகளை பொருத்தி வைத்து விட்டு அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். உண்மை கண்டறியும் குழுவில் இரண்டு விதமாக தடயங்களை வைத்து விசாரணை நடத்தப்படும். மயக்க மருந்து செலுத்தி சந்தேகப்படக் கூடிய நபரிடம் கேள்விகளை முன் வைப்பார்கள். அதன் மூலம் உண்மையை கண்டறிய முயற்சி செய்வார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு மயக்க மருந்துகள் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் சோடியம் பென்டபெத்தால், சோடியம் அமித்தால் உள்ளிட்ட மயக்க மருந்துகள் பயன்படுத்தப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மற்றொன்று சந்தேகப்படும் நபரிடம் கேள்விகள் கேட்கும்போது இதய துடிப்பு மற்றும் நாடி துடிப்பு, முக பாவனை வைத்தும் கண்டறிய முயற்சி நடைபெறும்.

உண்மை கண்டறியும் சோதனையில் கேட்கப்பட்டது என்ன - வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி:

இது குறித்து சந்தேகப்படக்கூடிய நபர்களின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், "நீதிமன்றத்தின் மூலமாக நான்கு நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், 12 கேள்விகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் 20 வினாடி இடைவெளி விட்டு இந்த கேள்விகளை கேட்டனர். 12 கேள்விகளும் ஒருவரிடமே 6 முறை மாற்றி கேட்கப்பட்டது. வரிசை மாற்றி, முன்னால் கேட்ட கேள்விகளை பின்னால் கேட்டார்கள். இப்படி மாற்றி மாற்றி ஒவ்வொருவரிடமும் 6 முறை கேள்விகள் கேட்டகப்பட்டன. கேள்வி கேட்கும்பொழுது இதய துடிப்பு, நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்காணித்து பதிவு செய்தனர்.

உனக்கு பேட்மிண்டன் விளையாட தெரியுமா? ராமஜெயத்தை உனக்கு தெரியுமா?, அவர் கொலை செய்யப்பட்ட தினத்தில் நீ எங்கே இருந்தாய்? என்றும் மற்ற கேள்விகள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி கேட்கப்பட்டது. ஆனால், போலீசார் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனை மூலம் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் காண முடியாது. இந்த சோதனை வெறும் கண்துடைப்புதான். சோதனை மூலம் மேற்கொண்ட அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்