தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: ‘கொஞ்சமல்ல.. ரொம்பவே வித்தியாசப்படுகிறார் சீமான்’

Seeman: ‘கொஞ்சமல்ல.. ரொம்பவே வித்தியாசப்படுகிறார் சீமான்’

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 04, 2023 12:41 PM IST

NTK: அவர் பேசும் அரசியலும், அவர் செய்யும் அரசியலும் விமர்சனத்திற்கு உட்பட்டது தான். ஆனால், வழக்கமான தமிழக அரசியலில் இருந்து தனித்துவமாக தெரிகிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

சீமானின் துணிவு

இதுவரை தமிழக அரசியல் களத்தில், எந்த அரசியல் கட்சியின் தலைவர்களும் தொடாத ஒரு பக்கத்தை சீமான் தொட்டார். அது சிறுபான்மையினர் பற்றிய கருத்து. அந்த கருத்து, சரியா, தவறா என்பதை விடுங்கள். அந்த கருத்தை தொடுவதற்கே ஒரு துணிவு வேண்டும். 

இந்துத்துவ கொள்கைகளை கொண்ட பாஜக கூட, சிறுபான்மைக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக சொன்னத்தில்லை. அப்படியிருக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  மின்சாரம் என்றும் தெரிந்தும் அதை தொடுகிறார் என்றால், உண்மையில் அவர் துணிச்சல்காரர் தான். வாக்கு அரசியலை முன்னெடுக்கும் யாரும், இந்த எல்லைக்கு வரமாட்டார்கள். 

முன் வைத்த காலை பின் வைப்பதில்லை

அரசியல்வாதிகள், பல நேரங்களில் உணர்ச்சிவயப்பட்டு கருத்துக்களை உதிர்ப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும், ஏன், ‘அந்த கருத்தை நான் கூறவே இல்லை’ என்று அந்தர்பல்டி அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், தான் கூறிய கருத்து சரியோ, தவறோ, அதில் தீர்க்கமாக நிற்கிறார் சீமான். அதிலிருந்து நூல் அளவும் அவர் பின்வாங்கவில்லை. இது, இதுவரை எந்த தலைவரும் வெளிப்படுத்தாத குணம். உண்மையில் சீமான், இந்த இடத்தில் கருத்து ரீதியாக தான் தீர்க்கமானவன் என்பதை உறுதி செய்கிறார். 

சமரசம் செய்ய மறுப்பு!

முன்பு கூறியது போல, ஒரு கருத்தை கூறியபின், அதனால் எதிர்ப்பு வரும் போது, பலர் வருத்தம் தெரிவித்து சரணடைவது உண்டு. ஆனால் சீமான், தனது கருத்தை நியாயப்படுத்தும் உதாரணங்களையும், ஆதாரங்களையும் முன்வைக்கிறார். இது அவருடைய உறுதி தன்மையை காட்டுகிறது. ‘அதையும் பார்க்கலாம்’ என்று துணிந்து, எதையும் எதிர்கொள்வதில் அவர் சமரசம் செய்ய மறுக்கிறார். 

கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டி என்கிற முடிவே, அவருடைய சமரசம் இல்லாத நிலைப்பாட்டுக்கு பெரிய ஆதாரம். அதே நேரத்தில், அந்த முடிவுக்காக ‘பாஜக பி டீம், திமுக பி டீம், அதிமுக பி டீம்’ என்கிற பல பட்டங்களும் அவருக்கு அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப சூட்டப்படுவது உண்டு. அதற்கும் பதிலளித்து விட்டு கடந்துவிடுகிறார் சீமான். 

முடிவுகள் அனைத்தும் சவால்!

சீமான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. ஆனால், அதைக் கடந்து, அரசியல் தலைவர்களுக்கான இலக்கணம் என்று இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள அத்தனை செங்கலையும், நொறுக்கியிருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது, அவருக்கு மட்டுமே தெரிகிறது. ஊரே எதிர்ப்பதை ஆதரிக்கிறார், ஆதரிப்பதை எதிர்கிறார், அவரை புரிந்து கொள்வதே பலருக்கு சவாலாக தான் இருக்கிறது. 

அவர் பேசும் அரசியலும், அவர் செய்யும் அரசியலும் விமர்சனத்திற்கு உட்பட்டது தான். ஆனால், வழக்கமான தமிழக அரசியலில் இருந்து தனித்துவமாக தெரிகிறார் சீமான். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்