தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12 Hour Work : 12 மணி நேரம் வேலை - தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை!

12 Hour Work : 12 மணி நேரம் வேலை - தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை!

Divya Sekar HT Tamil
Apr 23, 2023 10:45 AM IST

12 மணி நேரம் வேலைக்கு வழிவகுக்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில், 12 மணி நேரம் வேலைக்கு வழிவகுக்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த வெள்ளிக்கிழமை (21–4-2023) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்களும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

இருப்பினும், சில இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்