தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister M. Subramanian Has Said That Omicron Is Increasing

அதிகரித்து வரும் ஒமைக்ரான்.. பதட்டம் கொள்ள தேவையில்லை.. மா.சு சொல்வது என்ன?

Divya Sekar HT Tamil
Mar 10, 2023 12:33 PM IST

Omicron : தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக H3N2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சளித்தொல்லைக்கு 50 சதவீதம் புளுவைரஸ் ஏ வகை என்றும், 37.5 சதவீத ரெஸ்பிரேட்டரி சின்சைட்டியல்வைரஸ் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.

மேலும் புளு வைரஸ் தாக்கத்தில், H3N2 உப பிரிவு வைரசின் தாக்கம் எவ்வளவு என எந்த குறிப்புகளும் இல்லை. புளு வைரஸ் உபபிரிவில் H3N2 வகையே அதிக வீரியம் கொண்டது. மற்றபுளு வகை வைரஸ் தாக்கத்தைவிட H3N2 உபபிரிவே அதிக மருத்துவமனை சேர்ப்பிற்கு காரணமாக உள்ளது.

மருத்துவமனை சேர்ப்பு தேவைப்படும் நோயாளிகளில் 16 சதவீதம் பேருக்கு நிமோனியா காய்ச்சலும் 6 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புளு வகை வைரசால் ஒரு வயதிற்குகீழானவர்கள், 65 வயதைக்கடந்தவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், நோய்எதிர்ப்புசக்தி குறைந்த புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்று உறுப்பு சிகிச்சை மேற்கொண்டோர், நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் அதிகளவில் பாதிக்கப்படுவர். இவர்களுக்குகூடுதல் கவனிப்பு தேவை. மேலும் புளு வகை வைரஸ் முக்கிய உறுப்புகளை பாதித்து இறப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே H3N2 காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த முகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் H3N2 காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவரும். அதன் பிறகு அந்த காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.

இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்”எனக் கூறினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்