தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly 2024: ’மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது!’ ஈபிஎஸ்க்கு துரைமுருகன் பதில்!

TN Assembly 2024: ’மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது!’ ஈபிஎஸ்க்கு துரைமுருகன் பதில்!

Kathiravan V HT Tamil
Feb 22, 2024 02:24 PM IST

”தமிழ்நாட்டில் பிறந்த எவனும் அதற்கான இசைவை தரமாட்டான். எதிர்க்கட்சித் தலைவர் இதில் கவலைப்பட தேவையில்லை”

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா விடுவதில்லை, பிப்ரவரியில் இந்த பிரச்னை வந்தபோது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்பதால் இப்போது எடுக்க கூடாது என தமிழ்நாடு கூறியது. இருந்தாலும், மத்திய நீர்வள ஆணையம் விவாதத்திற்கு எடுத்தபோது, உச்சநீதிமன்றம் இந்த திட்டத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்பதால் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என கர்நாடக கூறியது. மத்திய நீர்வள ஆணையத்தில் உள்ள ஒன்றிய அரசு உறுப்பினர், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக எந்த ஆணையும் வராததால் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிடலாம் என்றார்கள். இப்பொருள் விவாதத்திற்கு ஏற்றதல்ல என கேரளா கூறியது. 

கர்நாடகாவை தவிர மற்ற உறுப்பினர்கள் இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறினார்கள். இதில் கருத்துகளை சொன்னார்களே தவிர ஓட்டு போடவில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துப்படி மேகதாது திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே திரும்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளோம். இத்திட்டம் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்படாத திட்டம். படுகை மாநிலங்களின் இசைவை கர்நாடகா பெறவில்லை என கடிதம் எழுதி உள்ளோம். 

வனம், சுற்றுசூழல் அனுமதியை வாங்கினாலும் கூட தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் ஒரு செங்கலை கூட எடுத்து முடியாது. கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியிலும் இதேதான் சொல்கிறார்கள். 

அவர்கள் நிதி ஒதுக்குவதால் மேகதாதுவை கட்டமுடியாது, தமிழ்நாட்டில் பிறந்த எவனும் அதற்கான இசைவை தரமாட்டான். எதிர்க்கட்சித் தலைவர் இதில் கவலைப்பட தேவையில்லை; இதில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை, ஆர்வம், வேகம் உள்ளதோ அதே ஆர்வம், அதே அக்கறை, அதே வேகம் எங்களுக்கும் உண்டு. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்