தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கவர்னர் போன்று , நீதிமன்றம் கேள்வி கேட்டால் அங்கு சாம்பல் அனுப்புவார்களா?-வானதி

கவர்னர் போன்று , நீதிமன்றம் கேள்வி கேட்டால் அங்கு சாம்பல் அனுப்புவார்களா?-வானதி

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2023 12:56 PM IST

Online Rummy Ban: ரம்மி தடை செய்வதில் பாஜக உறுதியாக உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி செய்தியாளர் சந்திப்பு
வானதி செய்தியாளர் சந்திப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். பெண்களுடன் இணைந்து செல்வதே வளர்ச்சி பாதை. பாஜகவில் 420 பேர் கடந்த ஒரு வாரத்தில் இணைந்துள்ளனர். ஆனால் பாஜகவில் இருந்து ஒருவர் சென்றாலும் பேசு பொருளாக மாறுகிறது. ஒரு தொண்டரும் இந்த கட்சியை விட்டு போக கூடாது என்பது தான் எங்கள் விருப்பம்.

உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம். ஆனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் விகிதம் குறைந்து வருகிறது. இதை கல்வித்துறை அமைச்சர் கவனிக்க வேண்டும்..

கொரோனாவிற்கு பின்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து கவனிக்க வேண்டும். திமுக தலைமுறை தலைமுறையாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். நீட் தேர்வு தொடர் போராட்டம் தான் ரகசியம் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய செயல். திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி , சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

ஐடி விங் குறித்து முதல்வர் பயப்படுகிறாரா?? முதலில் தன்னுடைய சகாக்களின் பேச்சுகளும் , அதற்கான எதிர்வினைகள் குறித்து கவனிக்க வேண்டும். கோடைக்காலம் இன்னும் வரவேயில்லை, ஆனால் தண்ணீர் பிரச்சினை வந்து விட்டது. குறிப்பாக

சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்த்த வேண்டும் என பாஜக சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் கோவை மீது இன்னும் அவர்களுக்கு வெறுப்பு தீரவில்லை.

ஆன்லைன் விளையாட்டு போட்டிகளை தடை செய்வதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஆன்லைன் ரம்மி குறித்து கவர்னர் கேட்ட கேள்வி போன்று , நீதிமன்றத்தில் கேட்டால் அங்கு சாம்பல் அனுப்புவார்களா? ஆன்லைன் ரம்மியில் நேரம் காலம் தெரியாமல் விளையாட வேண்டாம். மேலும் ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் பாஜக உறுதியாக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்