தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அப்போ இனித்தது; இப்போ கசக்குதா?’ அண்ணாமலையை விளாசும் செல்லூர் ராஜூ

’அப்போ இனித்தது; இப்போ கசக்குதா?’ அண்ணாமலையை விளாசும் செல்லூர் ராஜூ

Kathiravan V HT Tamil
Mar 09, 2023 01:06 PM IST

”மோடியா? லேடியா? என்று சொல்லி தனித்து நின்று வென்றவர் அம்மா, அவரை போல் எவனாலும் வர முடியாது. ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பறந்தாக முடியாது- செல்லூர் ராஜூ பதில்”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்.

கேள்வி: - பொதுச்செயலாளர் நியமனம் குறித்து ஆலோசிக்க கூட்டம் நடக்கிறதா?

தெரியவில்லை, நிச்சயம் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கேள்வி:- அதிமுக-பாஜக தொண்டர்கள் இடையே வார்த்தை போர் நிலவுகிறதே?

பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை, திமுகவிலோ, பாஜவிலோ இருந்து யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம். ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாறுவது சகஜம்தான்.

எங்கள் கட்சியில் இருந்து பாஜகவில் சேறும்போது இனிச்சிச்சு, இப்போ அங்கிருந்து இங்கே வரும்போது கசக்கிறதா?

இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்
இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்

பாஜகவினருக்கு முதலில் சகிப்புத்தன்மை வேண்டும்; வாய் அடக்கம் தேவை. வாய் கொழுப்புடன் பேசக் கூடாது. மத்தியில் ஆளும் திமிருடன் பேசக்கூடாது.

கூட்டணி கட்சியின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதை கடிப்பதை அதிமுக பொறுத்துக் கொண்டு இருக்காது.

கேள்வி:- ஈபிஎஸ் புகைப்படத்தை பாஜகவினர் எரித்துள்ளார்களே?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்

அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் பாஜகவினர், ஒரு காலத்தில் பாஜக என்றால் மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். தற்போது பாஜகவில் தகுதியற்றவர்கள், விஷக்கிருமிகள் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரிகிறது. இவர்களை எல்லாம் அடக்கி வைக்க வேண்டிய அண்ணமலையே இன்று வாய்க் கொழுப்பாக பேசுகிறார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவர் அம்மாவை போல் வருவேன் என்கிறார்.

கேள்வி:- ஜெயலலிதா உடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொண்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

மோடியா? லேடியா? என்று சொல்லி தனித்து நின்று வென்றவர் அம்மா, அவரை போல் எவனாலும் வர முடியாது. ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பறந்தாக முடியாது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்