தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kamal Campaign : ஈரோடு இடைத்தேர்தல் - இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை!

Kamal Campaign : ஈரோடு இடைத்தேர்தல் - இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை!

Divya Sekar HT Tamil
Feb 11, 2023 11:47 AM IST

kamal 3 days campaign : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மறைந்த ஈவேரா திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போடியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் பல்வேறு பிரச்சனைகளை கடந்த இரட்டை இலைசின்னத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

முன்னதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தல் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். எனது நண்பரும் பெரியாரின் பேரனுமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 

கமல்ஹாசன் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதேபோல திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிப்ரவரி 24,25ஆம் தேதிகளில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்