தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முதலியார்களுக்கு தாமோ! முஸ்லீம்களுக்கு மஸ்தான்! திமுகவின் சாதிக்கணக்கு!

முதலியார்களுக்கு தாமோ! முஸ்லீம்களுக்கு மஸ்தான்! திமுகவின் சாதிக்கணக்கு!

Kathiravan V HT Tamil
Feb 22, 2023 01:06 PM IST

காங்கிரஸ் வேட்பாளர் பலிஜா நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவராக உள்ள நிலையில் அதிமுகவும், தேமுதிகவும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளனர். செங்குந்தர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை வேட்பாளராக களமிறக்கி உள்ளார் சீமான்

அமைச்சர்கள் தாமோ.அன்பரசன், வெள்ளக்கோயில் சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், காந்தி, முத்துசாமி
அமைச்சர்கள் தாமோ.அன்பரசன், வெள்ளக்கோயில் சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், காந்தி, முத்துசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

தேர்தலை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு பறக்கும் மனுக்கள்

மக்களை கொட்டைகைகளில் தங்க வைத்து பரப்புரைக்கே ஆள் திரட்ட முடியாமல் திமுக சதி செய்வதாக கதறுகின்றனர் எதிர்க்கட்சிகள், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அணிவகுக்கிறது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பே பரப்புரையில் திமுகவின் கை ஓங்கி இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சாதிக்கணக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 40 சதவீதமும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், வன்னியர், பட்டியல் வகுப்பினர், தேவர், நாடார், சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களை சேர்ந்தவரக்ள் 30 சதவீதம் பேரும் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்.

சாதி ஓட்டுக்களை அள்ள கச்சைக்கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளது அரசியல் கட்சிகள், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பலிஜா நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவராக உள்ள நிலையில் அதிமுகவும், தேமுதிகவும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளனர். அத்தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மேனகா நவநீதன் என்ற வேட்பாளரை களத்தில் இறக்கி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

டார்கெட் செங்குந்தர் ஓட்டு

சபரீசன்
சபரீசன்

செங்குந்த முதலியார் சமுதாய ஓட்டுக்களே வெற்றியை தீர்மானிக்கும் நிலையில், அச்சமூதாயத்தின் ஆதரவை பெறும் வகையில் முதலியார் சமூகத்தை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனே நேரடியாக களத்தில் குதித்தார். ஈரோட்டில் செங்குந்த மகாசன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு கேட்டபோது “உங்களை சந்திக்க பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறோம், ஆனால் உங்களை சந்திக்கவே முடியவில்லை” என்ற வருத்தத்தை செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் கூற “இதுதான் என் பர்சனல் போன் நம்பர் எப்போது வேண்டுமானாலும் போன் செய்துவிட்டு சந்திக்க வரலாம்” என உறவுக்கரத்தை நீட்டி உள்ளர் சபரீசன், இதன் எதிரொலியாக ஈரோடு கிழக்கில் தங்களது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது செங்குந்த மகாஜன சங்கம்.

சாதிகளை குறிவைத்து காய் நகர்ததும் அமைச்சர்கள்

செங்குந்தர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை அள்ளும் நோக்கில் அதன் பொறுப்பாளராக செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான அமைச்சர் தா.மோ.அன்பரசனை பொறுப்பாளராக திமுக நியமித்துள்ளது.

கொங்கு வேளாளர் சமூகவாக்குகளை அள்ளும் வகையில் அமைச்சர்கள் முத்துசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், செந்தில் பாலாஜி வரை முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர்.

அமைச்சர்கள் செஞ்சி மஸ்தானும், நாசரும் ஈரோட்டில் உள்ள ஜமாத் நிர்வாகிகளின் ஆதரவை பெறும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

மறுபுறம் தெலுங்கு பேசும் பட்டியலின சமூகமான அருந்ததியர்கள் சமூக ஆதரவை பெற அமைச்சர்கள் மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் நாயுடு சமூகத்தின் ஆதரவை பெற எ.வ.வேலு, காந்தி ஆகியோர் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் கண்ணன் குல லெட்டர் பேட்

கண்ணன் குலத்திற்கு வாக்கு கேட்டு எடப்பாடி பழனிசாமி அனுப்பியதாக கூறப்படும் கடிதம்
கண்ணன் குலத்திற்கு வாக்கு கேட்டு எடப்பாடி பழனிசாமி அனுப்பியதாக கூறப்படும் கடிதம்

தனது சொந்த சமூகத்தின் வாக்குகளை அள்ளும் வகையில் கண்ணன் குலத்தை சேர்ந்தவர்கள் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ள லெட்டர்பேட் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இக்கடிதம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தோ அல்லது அதிமுக தரப்பில் இருந்தோ இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.

முதலியார்ளை புகழும் சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் சீமான்

இதே போல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தனது மேடைகளில் செங்குந்தர் சமூதாயத்தின் வரலாற்றை பற்றி புகழ்ந்து பேசி காய்களை நகர்த்தி வருகிறார். தொகுதிகளில் அதிக வாக்குகளை கொண்ட சமூகமாக இருந்தாலும் முக்கிய கட்சிகள் தங்களை புறக்கணித்துள்ளதாக கருதும் செங்குந்தர்கள் வாக்குகள் ஓரளவுக்கு மேனகா நவநீதன் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதித் தேர்தல் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான தேர்தல் அல்ல சாதிபலத்திற்கும் பணபலத்திற்குமான தேர்தல்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்