தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika Apte: எனது உடல் பற்றிப் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா?

Radhika Apte: எனது உடல் பற்றிப் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2023 10:38 AM IST

சினிமாவில் உடல் எடை அதிகரித்த காரணத்தினால் எனக்கு வாய்ப்புகள் பறிபோனது என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிக படங்கள் நடித்து வருகிறார். கவர்ச்சியான காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார் நடிகர் ராதிகா ஆப்தே. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தற்போது அதிகம் விரும்பி நடித்து வருகிறார். இந்நிலையில் தான் உருவக் கேலிக்கு ஆளானதாக நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்," பலர் நடிகைகளை உருவக் கேலி செய்து வருகின்றனர். குறிப்பாக இதை அவர்களின் உரிமையாகக் கருதுகின்றனர். இது போன்ற அவமானங்கள் தனக்கும் ஏற்பட்டன.

எனது மூக்கு சரியில்லை எனப் பலர் தெரிவித்துள்ளனர். எனது மூக்கை காரணமாகச் சொல்லியே பல பட வாய்ப்புகளைத் தராமல் நிறையப் பேர் என்னைத் தவிர்த்து உள்ளனர். மார்பகங்கள் பெரிதாக இல்லை எனப் பலர் என்னை விமர்சித்துள்ளனர். மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொண்டு வாருங்கள் வாய்ப்பு தருகிறோம் எனக் கூறினர்.

இதுபோல் பலரும் எனது உடல் தோற்றத்தைக் கேலி செய்துள்ளனர். அதற்கான முயற்சிகள் ஈடுபட்டு நான்கு கிலோ வரை உடல் எடையை அதிகரித்தேன். ஆனால் பட வாய்ப்புகளை மீண்டும் இழந்தேன். தங்களின் உடல் தங்களது உரிமைகளாகப் பலரும் கருதி வருகின்றனர். இப்போது யாராவது அப்படிப் பேசினால் சுட்டுத் தள்ளி விடுவேன்" எனக் கூறியுள்ளார்.

சமீபமாக உருவக் கேலிக்கு ஆளாகிப் பல நடிகைகள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் முன்னணி நடிகையான கேரள நடிகை ஹனிரோஸ் சமூக வலைத்தளங்களில் தனது உருவத்தைப் பற்றி கேலி செய்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.

நடிகை ஹனிரோஸ் சற்று உடல் எடை கூடி குண்டாக உள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் சில அவரது உருவத்தைக் கேலி செய்துள்ளனர். இதனால் உங்களது இஷ்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாகப் பேசி நீங்கள் நோகடிக்க வேண்டாம் பார்க்கும்போது மன வருத்தமாக உள்ளது என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்