தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வாலை சுருட்டி வையுங்கள்! - ஏ.பி.வி.பி. அமைப்புக்கு திமுக மாணவர்கள் அணி கண்டனம்

வாலை சுருட்டி வையுங்கள்! - ஏ.பி.வி.பி. அமைப்புக்கு திமுக மாணவர்கள் அணி கண்டனம்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 22, 2023 01:35 PM IST

Chennai : பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைக் கொண்ட ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பான குண்டர் படைக்கு உரத்து கூறவேண்டிய நேரம் வந்திருக்கிறது.

DMK Students Wing - JNU Unit
DMK Students Wing - JNU Unit

ட்ரெண்டிங் செய்திகள்

தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 22-02-2023 புதன்கிழமை, காலை 10.00 மணியளவில், ஈரோடு, கொல்லம்பாக்கம், லோட்டஸ் மருத்துவமனை அருகில், “எஸ்.கே.ஐ. டவர்சில்”, கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கலந்தாலோசனை கூட்டத்தில், அணியின் துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார்,

கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் - 1:

இளமைக் காலம் தொட்டு, இன்று வரையிலும் ஓயாத உழைப்பால், உறுதிமிக்கக் கொள்கைப் பிடிப்பால், கடைக்கோடி தொண்டனைப் போல் கழகக் கொடியை கையிலேந்தி பிரச்சாரம், நாடகங்களை நடத்தி இளைஞர்களைஒன்றிணைத்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை தானே உருவாக்கி சிறுவயதிலேயே சமூகப் பணிகளை மேற்கொள்ள தொடங்கியவர், நெருக்கடிக் காலக் கொடுமைகளை (மிசா) சந்தித்து, உயிரை துச்சமெனக் கருதி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைப் போல், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்! என்ற முழக்கத்திற்குரிய உன்னதத் தொண்டனாய், தனது தியாகத்தால் அரசியல் வாழ்வைச் செதுக்கி, 50 ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமல், அனைவரையும் அன்பால் கட்டி அரவணைத்து, தான் கழகத் தலைவராய் பொறுப்பேற்ற நாள் முதல் கண்ட தேர்தல்களெல்லாம் வெற்றி முகமாய்க் கழகத்தைக் கொண்டு சென்று

ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களில் தலை சிறந்தவராகவும், கழகத் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடிடும் வகையில் நல்லாட்சி வழங்கி, நம்மைத் தலைநிமிர வைத்திருக்கும் தன்னிகரில்லா தலைவர்; ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவற்றின் நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓய்வறியமால் உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70-வது பிறந்த நாள் (01-03-2023) விழாவினை “இளைஞர் எழுச்சி நாள்” என்று மட்டுமில்லாமல், தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாகவும், எழுச்சி பெறுகின்ற நன்னாளாய் கொண்டாடவும், மக்களுக்குப் பயனுள்ளதாக கொண்டாடிடும் வகையில், கழக மாணவர் அணி சார்பில் கழக இரு வண்ண கொடியேற்றி, எளியோர்களுக்குப்

பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வித் தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவி செய்தல், விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்த தான முகாம்களை நடத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற பணிகளைக் கழக மாணவர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடத்திட வேண்டும் என்று இக்கூட்டத்தில் பெருமகிழ்ச்சியுடன் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில், கல்வியின்

துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் தமிழ்நாட்டின் மாணவியர்களுக்கு, தந்தையின் பேரன்போடு, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஏழை பெண் திருமண உதவித் திட்டத்தை” மாற்றியமைத்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பெயரிலான திட்டத்தை சமூக மாற்றத்திற்கான விதையாக “புதுமைப் பெண்” என்ற புரட்சிகர திட்டத்தை

இந்திய ஒன்றியம் மட்டுமல்ல; உலகமே வியந்து பார்க்கும் வகையில் செயல்படுத்தி திட்டத்தின் முதல் கட்டத்தில் 1,16,342 மாணவிகள்

பயன்பெற்று வருகிறார்கள். மேலும், இத்திட்டத்தை கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்ததன் விளைவாக, கல்லூரிகளில் சேர்ந்து பொருளாதார சூழ்நிலையில் கல்வி கற்ற இயலாமல் இடைநிற்றலான 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும். இந்நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தற்போது 1,04,347 மாணவிகள் கூடுதலாக இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். திருமண தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கு கல்வி என்னும் நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்று “பெண்ணுரிமை” காக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 3:

1922-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு, நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்ட மதிய உணவு திட்டமானது,

தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் உண்மையான சத்துணவு வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில், வாரத்தின் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொடக்கப்பள்ளி மாணவச் செல்வங்களின் உடல் ஆரோக்கியத்தையும், மனவலிமையையும் அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை” தொடங்கியுள்ளார். இதன்மூலம் 1.14 லட்சம்

மாணவச் செல்வங்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் பசிப்பிணியின்றி கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை தொடங்கிய தாயுள்ளம் கொண்ட கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கழக

மாணவர் அணியின் இக்கூட்டம் தமது செம்மார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 4:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்கும் வகையில், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு தனது பிறந்தநாளான 01-03-2022 அன்று “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது வரையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் மூலம் தங்களது திறமைகளை ஆவர்முடன் வளர்த்து வருகின்றனர்.

இத்திட்டத்தினை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்குரிய திறன்பயிற்சி அளிக்கும் விதமாக மேம்படுத்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தனது மேலான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மாணவர்கள்-இளைஞர்கள் நலனில் பெரும் அக்கறையோடு திட்டங்களை தீட்டி செயல்படுத்தும், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச்

செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான இளந்தலைவர் திரு. உதயநிதி

ஸ்டாலின் அவர்களும், கழக மாணவர் அணியின் இக்கூட்டம் செம்மார்ந்த நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.

மேலும், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு, இதுவரை 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 இலட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து, சுமார் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துக் கொண்டே, மறுபுறம் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதற்கு

கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 5:

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யூ) பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP) அமைப்பானது,

20-02-2023 அன்று தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது! மேலும், சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு

என்று சமூக சீர்த்திருத்தத்தை, சமத்துவத்தை ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் தலைவர்களின் படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, இந்துத்துவா அரசியலை ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏ.பி.வி.பி. அமைப்பு. உலகத்தில் எந்தஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு,

இன்னல் ஏற்படுமாயின் அதனை கண்டித்து, தமிழர்களுக்கு முதலில் கை கொடுத்து உயர்த்தும் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இச்சம்பவம் குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்ததுடன், பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாககமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், கொடுங்காயமுற்ற தமிழ்நாட்டு மாணவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுடன் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறத்தலின் பேரில், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் திரு. திருச்சி சிவா அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டாக்டர். செந்தில்குமார் அவர்களும் டெல்லி, ஜெ.என்.யூ. கல்லூரிக்கு நேரில் சென்று, மாணவர்களுக்கு ஆறுதல் கூறி, உடைக்கப்பட்ட தந்தை பெரியாரின் புது படத்தை வழங்கி, தி.மு.க.வின் நல்ஆதரவினை தெரிவித்து வந்ததன் மூலம், தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பு உணர்வை பெற்றதன் விளைவாக அவர்கள் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவர்களை இனவெறி கொண்டு தாக்கிய, ABVP அமைப்பை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆறுதலையும் தெரிவித்த கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை இக்கூட்டம் பதிவு செய்கிறது.

மேலும், பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைக் கொண்ட ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பான குண்டர் படைக்கு உரத்து கூறவேண்டிய நேரம் வந்திருக்கிறது. கனக விசயரின் முடித்தலை நெரித்துக் கல்லினை வைத்தவர்கள் நாங்கள்! இமயமலையினில் மீன்கொடி ஏற்றி புகழ்பட வாழ்ந்தவர்கள் நாங்கள்! வடக்கே இமயம் சென்று கொடியேற்றிய தமிழர்களின் வீரம், இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதைப் அவர்கள் உணர வேண்டும்! இல்லையேல் வருத்தப்படுவார்கள்! இனி இப்படியொரு சம்பவம் நடப்பின், கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மாணவர் அணி கரம் கோர்த்து டெல்லி செல்வோம்! எதிரிகளை வெல்வோம்! “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்” எச்சரிக்கிறோம்! வாலை சுருட்டி வையுங்கள்! என்று ஆர்.எஸ்.எஸ்.

சித்தாந்தத்தை கொண்ட பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கு தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.

இரங்கல் தீர்மானங்கள்:

1) கழக மாணவர் அணியின் இணைச் செயலாளர் திரு.

பூவை சி. ஜெரால்டு அவர்களின் தந்தையார் திரு. N.D.R. சந்திர பாபு

அவர்கள், (வயது 74) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்

என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்