தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Day Of Mourning Is Observed In Tamil Nadu Due To The Odisha Train Accident. Chief Minister Canceled All Government Pro

Odisha Accident : ஒடிசா ரயில் விபத்து – தமிழகத்தில் ஒரு நாள் துக்கம் – அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து – முதலமைச்சர்

Priyadarshini R HT Tamil
Jun 03, 2023 08:38 AM IST

Odisha Train Accident : ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழகத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து முதலமைச்சர்
ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழகத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து முதலமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதேபோல் தமிழகத்திலும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்த முதலமைச்சரின் அறிக்கையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின் தமிழ்நாட்டின் மருத்துவக்குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் தொலைபேசி மூலம் ஒடிசா முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்கு தேவையான உதவிகளை செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போகுகுவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளை விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். இதனால், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்