தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  இருவேறு இடத்தில் இருந்து வந்த சோதனை குறித்த அறிவிப்பு - ஹரியானா மல்யுத்த கூட்டமைப்பு ஏற்படுத்திய குழப்பம்

இருவேறு இடத்தில் இருந்து வந்த சோதனை குறித்த அறிவிப்பு - ஹரியானா மல்யுத்த கூட்டமைப்பு ஏற்படுத்திய குழப்பம்

Marimuthu M HT Tamil
Jan 05, 2024 11:22 AM IST

நிர்வாக குளறுபடியில் மல்யுத்த வீரர்கள் சிக்கினர்.

மல்யுத்தத்தின் கோப்பு புகைப்படம்.
மல்யுத்தத்தின் கோப்பு புகைப்படம். (File)

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் பிப்ரவரி 2 முதல் 5ஆம் தேதி வரை, ஜெய்ப்பூரில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்தியன் ஒலிம்பிக் அசோசியசனின் தற்காலிகக் குழு அறிவித்தது. 

இதனை அடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யூ.எஃப்.ஐ), இந்திய ஒலிம்பிக் அசோசியேசன், தனி தேசிய சாம்பியன்ஷிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதை அறிந்து, இந்த நடவடிக்கையைத் 'சட்டவிரோதமானது' என்று கூறியது. இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில கூட்டமைப்பில் மல்யுத்தத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், மல்யுத்த வீரர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். 

ஹரியானா அமாதுவர் மல்யுத்த சங்கத்தின் (ஹவா) தலைவர் ரோஹ்தாஷ் சிங் சோனிபட்டில் ஜனவரி 17 முதல் 18 வரை மாநிலத்தின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதே நேரத்தில் ஹவா பொதுச்செயலாளர் புதன்கிழமை ஒரு தனி சுற்றறிக்கையை வெளியிட்டார்.

முன்னதாக முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் பிரிவை ஆதரித்த ரோஹ்தாஷ், போராடும் மல்யுத்த வீரர்களின் ஆதரவு குழுவுக்கு ஆதரவாக மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு முன்பு கட்சி மாறி இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். மறுபுறம், ராகேஷ் சிங்குக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த கூட்டமைப்பின் ஆதரவு உள்ளது.

"நாங்கள் இரண்டு மாநில சோதனைகளில் கலந்து கொள்ள முடியாது.மேலும் எங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம். யார் போட்டிகள் குறித்து அனுப்புவார்கள். அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கும், கூட்டமைப்பை யார் நிர்வகிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ஒருவர் கூறினார்.

சோனிபட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ராஜேஷ் சரோஹா கூறுகையில், "மல்யுத்த வீரர்களுக்கு இது மிகவும் மோசமான சூழ்நிலை. 

மல்யுத்த வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது. கடந்த ஆண்டு விளையாட்டைச் சுற்றியுள்ள இதுபோன்ற குழப்பங்களால் மல்யுத்த வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு அமைச்சகத்திடமிருந்து தெளிவு இருக்க வேண்டும்"என்று சரோஹா கூறினார். அவருக்குக் கீழ் ஐந்து மல்யுத்த வீரர்கள் தேசிய சாம்பியன்ஷிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் நடைபெறும் சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்ய மாநில சோதனைகள் நடத்தப்படும் என்று ரோஹ்தாஷ் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்றொரு நிர்வாகி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அதை ஹரியானா சீனியர் மாநில மல்யுத்த சாம்பியன்ஷிப் என்று குறிப்பிடுகிறது.

இந்த குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஜனவரி 16-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு எந்த மல்யுத்தப்போட்டிகளும் நடத்தப்படவில்லை. விளையாட்டு விதிகளை மீறியதற்காக மல்யுத்த கூட்டமைப்பினை விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. பின்னர், நிர்வாகத்தைக் கவனிக்கவும், சர்வதேச போட்டிகளுக்கு அணிகளை அனுப்பவும் மூன்று பேர் கொண்ட தற்காலிக குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இருக்கும்போது தேசிய சாம்பியன்ஷிப்பை நடத்த தற்காலிக குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எந்த மாநில அணியும் தனது அணியை களமிறக்காது. மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தேசிய சாம்பியன்ஷிப்பை நடத்தும்" என்று ஒரு மூத்த மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரி கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்