Google Update:360 டிகிரி நகரும் கோணத்தில் விடியோ பேக்கிரவுண்டு அறிமுகம்
மொபைலில் கடற்கரை, கோயில் போன்ற பேக்கிரவுண்டு நகருவது மற்றும் மாறும் தன்மையுடன் கூடிய ஹைரோஸ்கோப் என்ற புதுமையான அனுபவத்தை பயனாளர்களுக்கு வழங்க உள்ள கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளில் புதிதாக நகரும், மாறும் விதமான விடியோ பேக்கிரவுண்டுகள் அறிமுகம்
உலக அளவில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் தேடுபொறியான கூகுள் 360 கோணம் விடியோ பேக்கிரவுண்டை மொபைல் பயனாளர்களுக்கு வழங்கவுள்ளது.
இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் தனது பிளாக் பதிவில், "தற்போது இடம்பெற்றிருக்கும் லைப்ரேரியில் கண்கவரும் விதமான விடியோ பேக்கிரவுண்டுகள் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மொபைல் பயனாளர்கள் 360 டிகிரி கோணங்களில் விடியோ பேக்கிரவுண்டுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்".
இந்த புதுமையான ஹைரோஸ்கோப் பேக்கிரவுண்டுகள் கடற்கரை, கோயில் போன்ற பல்வேறு விடியோக்கள் உள்ளன.