தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chess: செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற நிறைமாத கர்ப்பிணி ஹரிகாவுக்கு பெண் குழந்தை

Chess: செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற நிறைமாத கர்ப்பிணி ஹரிகாவுக்கு பெண் குழந்தை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 25, 2022 01:24 PM IST

44வது செஸ் ஒலிம்பியாடில் நிறைமாத கர்ப்பிணியாக பங்கேற்று விளையாடிய கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோனவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற இந்திய பெண் ஏ பிரிவு அணியில் ஹரிகா
செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற இந்திய பெண் ஏ பிரிவு அணியில் ஹரிகா

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹரிக்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் செல் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற நிலையில், அவருக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் என உடனடியாக மருத்துவ சேவை பெறும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் முன் ஹரிகா கூறும்போது, 2004 ஆம் ஆண்டு முதல் நான் பங்கேற்கும் மதிப்புமிக்க போட்டியாக செஸ் ஒலிம்பியாட் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த தொடரில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்பியதால் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்றும் போட்டியில் பங்கேற்கிறேன்" என்றார்.

இந்திய பெண்கள் பிரிவில் ஏ அணியில் விளையாடிய அவருக்கு முதல் 2 சுற்றுகள் ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய அவர் 4 சுற்றுகளை டிரா செய்தார்.

இதையடுத்து ஹரிகா இடம்பெற்ற இந்திய பெண்கள் ஏ அணி செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. இதில் ஹரிகாவின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. பதக்கம் வென்ற பிறகு கூறும்போது," நிறைமாத கர்ப்பிணியாக போட்டியில் பங்கேற்ற சாதித்தது உணர்வுபூர்வமாக உள்ளது. இந்தியாவில் ஒலிம்பியாட் போட்டிய நடைபெறுவதாக இருந்த நிலையில், அதில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொண்டேன்.

இதற்காக வளைகாப்பு நிகழ்வு, பார்ட்டி உள்பட கொண்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் வெற்றி பெற்ற பிறகே இவை அனைத்தைிலும் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தேன். இந்த தருணத்துக்காக காத்திருந்து தற்போது சாதித்துள்ளேன். ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது" என்று கூறினார்.

32 வாரத்தை கடந்த பின்னர் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றார் ஹரிகா. தற்போது இந்த தொடர் முடிவுற்ற அடுத்த இரண்டு வாரங்களில் பெண் குழந்தைக்கு தயாகியுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்