தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  காங்கிரஸில் இருந்து திடீரென விலகிய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரின் மகன்!

காங்கிரஸில் இருந்து திடீரென விலகிய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரின் மகன்!

Manigandan K T HT Tamil
Jan 25, 2023 11:25 AM IST

Congress party: மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

அனில் கே. அந்தோணி
அனில் கே. அந்தோணி (@anilkantony)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க மன நிலையை பிரதிபலிப்பதாக கூறியது.

அத்துடன், இந்த ஆவணப்படத்தின் லிங்க்குகளை ஷேர் செய்யும் யூ-டியூப் வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகளை தடை செய்யவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அனில் கே அந்தோணி பிபிசி தொடருக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

அந்தப் பதிவில், "பாஜகவுடன் பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிபிசியில் உள்ளவர்கள், பாரபட்சத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இங்கிலாந்து அரசு ஸ்பான்சர் சேனலான பிபிசி, மற்றும் ஈராக் போரின் பின்னணியில் மூளையாக இருந்த ஜாக் ஸ்ட்ரோவின் பார்வைகளை முன்வைப்பது ஒரு ஆபத்தான முன்னுரிமை ஆகிவிடும். நமது இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தப் பதிவுக்கு அக்கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அனில் கே அந்தோணி அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்தும், கேரளா காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நான் விலகிக் கொள்கிறேன். சகிப்புத்தன்மையற்றவர்கள் எனது டுவிட்டர் பதிவை எடுக்க சொல்கிறார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். நான் எனது பொறுப்பை ராஜிநாமா செய்துவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவுடன் கட்சியிலிருந்து விலகும் கடிதத்தையும் இணைத்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்