தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crypto Crime: டெலிகிராம் உஷார்… கிரிப்டோ முதலீட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த நபர்!

Crypto Crime: டெலிகிராம் உஷார்… கிரிப்டோ முதலீட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த நபர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 20, 2023 01:23 PM IST

அந்த நபரும் அதை நம்பி, சிறிய தொகையை முதலில் முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் நல்ல வருமானத்தைப் முதலீடு மூலம் பெற்றுள்ளார். இதனால் பேராசை கொண்ட அந்த நபர் ரூ.13.86 லட்சத்தை அந்த பெண் சொல்ல கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார்.

கிரிப்டோ கரென்ஸி கோப்புபடம்
கிரிப்டோ கரென்ஸி கோப்புபடம் (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

டெலிகிராம் செயலி மூலம், கிரிப்டோ முதலீடு செய்யுமாறு பலரும் ஆசை காட்டி வருகின்றனர். எங்கிருந்து பேசுகிறார்கள், எந்த எண்ணில் இருந்து பேசுகிறார்கள் என்பது அவர்கள் தொடர்பு கொள்ளும் எண்ணில் தெரியாது. 

ஆனால், நமக்கு பரிட்சையமான பெயரில் நம்மை அவர்கள் தொடர்பு கொள்வார்கள். உதாரணத்திற்கு, முதலில் வெளிநாட்டு நபர் போல நம்மை தொடர்பு கொள்வார்கள்.

நாம் அதை உதாசீனப்படுத்தினால், அதன் பின் இந்திய நபர் போல நம்மை தொடர்பு கொள்வார்கள். சிலர் அதை நம்பி அவர்களிடம் உரையாட தொடங்குவார்கள். அப்போது, கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்துவார்கள். 

அதற்காக சில முன்னுதாரணங்களை அவர்கள் காட்டுவார்கள். முதலில் பணம் போட்டு அதில் லாபத்தையும் ஈட்டித் தருவார்கள். ஆசையில் அடுத்தடுத்து பெரிய தொகையை நாம் போடும்போது, அதன் பின் அவர்கள் வேலையை காட்டிவிட்டு டாட்டா காட்டிவிடுவார்கள். 

இது தான் இப்போதைக்கு ஆன்லைனில் வரும் பேமஸ் மோசடி. மும்பை ஆணுக்கும் இது தான் நடந்திருக்கிறது. கீதா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண், கடந்த வாரம் டெலிகிராம் செயலி மூலம் புகார்தாரரைத் தொடர்பு கொண்டுள்ளார். 

அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் கிரிப்டோக்களில் முதலீடு செய்யும்படி அவரை மூளைச் சலவை செய்துள்ளார் அந்த பெண். அந்த நபரும் அதை நம்பி, சிறிய தொகையை முதலில் முதலீடு செய்துள்ளார்.  ஆரம்பத்தில் நல்ல வருமானத்தைப் முதலீடு மூலம் பெற்றுள்ளார். இதனால் பேராசை கொண்ட அந்த நபர் ரூ.13.86 லட்சத்தை அந்த பெண் சொல்ல கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார். 

ஆனால் அதன் பின் அவருக்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. அதன் பிறகு தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் புகார்தாரர். இதைத் தொடர்ந்து, மும்பை டோம்பிவலியில் உள்ள விஷ்ணு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்