தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Swiggy: 380 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஸ்விக்கி! பகிரங்க மன்னிப்பு கேட்ட Ceo

Swiggy: 380 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஸ்விக்கி! பகிரங்க மன்னிப்பு கேட்ட CEO

Kathiravan V HT Tamil
Jan 20, 2023 05:43 PM IST

பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும். அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்த பிறகு எடுக்கப்பட்ட கடினமான முடிவு என அந்நிறுவன CEO தெரிவி்த்துள்ளார்

ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் - கோப்புப்படம்
ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, ஸ்விக்கி நிறுவன தலைமை செயல் அதிகாரி
ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, ஸ்விக்கி நிறுவன தலைமை செயல் அதிகாரி

பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும். அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்த பிறகு எடுக்கப்பட்ட கடினமான முடிவு எனவும் தெரிவித்துள்ள மஜெட்டி, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவித் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார். ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் இறைச்சி விநியோகத்தை தொடர்ந்து வழங்கும் எனவும், நிறுவனத்தின் கணிப்புகளுக்கு எதிராக உணவு விநியோகத்திற்கான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்று மெஜெட்டி கூறினார்.

"எங்கள் லாப இலக்குகளை அடைய, எங்கள் ஒட்டுமொத்த மறைமுக செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். உள்கட்டமைப்பு, அலுவலகம் பிற மறைமுக செலவுகள் மீது நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தாலும், எதிர்கால பொருளாதார கணிப்புகளுக்கு ஏற்ப எங்கள் ஒட்டுமொத்த பணியாளர்களின் செலவுகளையும் சரியான அளவில் அளவிட வேண்டும் எனவும்

முன்னதாக காலையில், ஸ்விக்கி ஊழியர்களின் டவுன்ஹாலில் உரையாற்றிய அவர், பணியாளர் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பதவிக்காலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் ஸ்விக்கி மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான பணப்பரிமாற்றத்தை வழங்கியுள்ளது. அவர்கள் உறுதிசெய்யப்பட்ட மூன்று மாத ஊதியம் அல்லது அறிவிப்புக் காலம் மற்றும் நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் 15 நாட்கள் கூடுதல் கருணைத் தொகை மற்றும் பாலிசியின்படி மீதமுள்ள சம்பாதித்த விடுப்பு எது அதிகமோ அதைப் பெறுவார்கள் என தெரிவித்தார்.

"இது பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மூன்று மாத ஊதியத்தை உறுதி செய்யும். இதில் 100 சதவீதம் மாறக்கூடிய ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகளும் அடங்கும். சேரும் போனஸ், செலுத்தப்பட்ட தக்கவைப்பு போனஸ் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்