தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Raj: Bjp Attacks Cong Over Video Of Woman Being Forcibly Moved Out Minister's Residence

Viral video: அமைச்சரின் வீட்டுக்கு மனு கொடுக்க சென்ற பெண் தாக்கப்பட்டாரா?

Manigandan K T HT Tamil
Jan 30, 2023 06:56 PM IST

ராஜஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மம்தா பூபேஷை அவரது இல்லத்தில் பார்க்க வந்த ஒரு பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் அமைச்சர் மம்தா பூபேஷ் (வலது)
ராஜஸ்தான் அமைச்சர் மம்தா பூபேஷ் (வலது)

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. இந்நிலையில், அமைச்சரின் வீட்டில் இருந்து ஒரு பெண் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வீடியோ வெளியாகியிருந்ததை சுட்டிக் காட்டி அந்த மாநில பாஜக ஆளும் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த வீடியோ காங்கிரஸ் அரசையும் அதன் அமைச்சர்களின் பணிகளையும் எடுத்துக் காட்டுகிறது.

இத்தனை கொடூரமாக காங்கிரஸ் நடந்து கொண்டால் அதன் ஆட்சியின் முடிவுக்கு காலம் விரைவில் வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தும் இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சர் அசோக் கெலாட் அரசில் அமைச்சராக இருக்கும் மம்தா பூபேஷிடம் கோரிக்கையுடன் வந்த ஒரு பெண் தன் மகள் முன் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். இதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

பெண்கள் தங்களது குரலை உயர்த்தினால் எல்லையைத் தாண்டுவதாக அரசு கருதுகிறது.

இவர்கள் ஏழைகளின் மகள்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகின்றனர். இந்த சிந்தனையால், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனத்திற்கு எல்லையே இல்லை என்பது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார் கஜேந்திர ஷெகாவத்.

இந்த விவகாரம் தொடர்பாக பெண் அமைச்சர் மம்தா பூபேஷ் கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்