தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rahul Gandhi Participates In A Snake Boat Race In Kerala

snake boat race: பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் - வைரல் வீடியோ

Karthikeyan S HT Tamil
Sep 19, 2022 07:02 PM IST

கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றாா்.

ஆலப்புழா வடகாலில் இன்று மீனவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.
ஆலப்புழா வடகாலில் இன்று மீனவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்னும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறாா். கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய ராகுலின் நடைபயணம் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று ஆலப்புழா புன்னப்புராவில் தங்கி இருந்த ராகுல், இன்று காலை 12ஆவது நாள் பயணத்தை அங்கிருந்து தொடங்கினார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

நடைபயணம் தொடங்கும் முன்பு ராகுல் ஆலப்புழா வடக்கால் கரையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய ராகுலுக்கு வழி நெடுக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் ராகுல் உற்சாகமாக பங்கேற்றார். ராகுல் படகு பந்தயத்தில் கலந்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்