Tamil News  /  Nation And-world  /  Priyanka Gandhi, Her Son, Husband Join Rahul's Bharat Jodo Yatra

Bharat Jodo Yatra: ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைந்த பிரியங்கா - வீடியோ

ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்கா (TNCC)

போர்கான்: மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா இணைந்துள்ளார்.

போர்கான்: மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல், நேற்று காலை மத்தியப்பிரதேச மாநில எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், மத்தியப்பிரதேசத்திற்குள் நடைப்பயணத்தை தொடர்ந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் (நவ.24) இன்று 78வது நாளாக மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

மத்தியப்பிரதேசத்தின் போர்கானில் இருந்து தொடங்கிய நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பங்கேற்றுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் அடுத்த 10 நாட்கள் 7 மாவட்டங்களில் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டாபிக்ஸ்