தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rrr படஇயக்குநர் மோடின்னு சொல்லிடாதீங்க! பாஜகவினரை குலுங்கி சிரிக்க வைத்த கார்கே!

RRR படஇயக்குநர் மோடின்னு சொல்லிடாதீங்க! பாஜகவினரை குலுங்கி சிரிக்க வைத்த கார்கே!

Kathiravan V HT Tamil
Mar 14, 2023 01:07 PM IST

“ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். இது எங்களுக்கு பெருமையை தருகிறது”- கார்கே

RRR திரைப்படம் - மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
RRR திரைப்படம் - மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை இயக்கிய கார்த்திகி சோன்சல்வேஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரும் ஆஸ்கர் விருதினை பெற்றனர்.

இந்தியாவில் இருந்து சென்ற 2 திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் “தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் படத்தை 2 பெண்கள் இயக்கி உள்ளனர்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இது இந்திய பெண்களுக்கு கிடைத்த பெருமை. ஆர்.ஆர்.ஆர் படத்தின் திரைக்கதையை எழுதிய வி.வி.பிரசாத் இந்த அவையின் உறுப்பினர். இந்த நேரத்தில் அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில். “ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். இது எங்களுக்கு பெருமையை தருகிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே

ஆளுங்கட்சிக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கை என்னவென்றால், இதை நாங்கள்தான் இயக்கினோம், நாங்கள்தான் இந்த பாடலை எழுதினோம், மோதி ஜிதான் இந்த படத்தை இயக்கினார் என்று சொல்லாமல் இருந்தால் மட்டும் போதும், இது தேசத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பாக இருக்கும்” என்றார்.

மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சால் பாஜகவினர் உட்பட மாநிலங்களவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பேசிய துணைக்குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தங்கர், ”காலையில் படித்த ஏராளமான நாளேடுகள் ஆஸ்கர் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்துள்ளனர். இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டிய தருணம் என்று பேசினார்.”

துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர்
துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1984ஆம் ஆண்டிலேயே இந்தியா ஆஸ்கர் விருதினை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் பேசினார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணத்தில் ஆளுங்கட்சி அரசியல் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்