தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Oscar Award The Elephant Whisperers Director Interview

ஆஸ்கர் வென்ற தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறித்து என்ன இயக்குனர் சொல்கிறார்?

Priyadarshini R HT Tamil
Mar 13, 2023 12:24 PM IST

Oscar Award : கார்த்திகி கோன்சால்வேஸ் ஹிந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டி, மனிதனும், விலங்குகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு குறித்து பேசியுள்ளார்.

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

ஏற்கனவே விலங்குகளுடன் பணி செய்திருந்த மற்றும் காடுகளில் இருப்பதற்கு அச்சப்படாத ஒரு ஒளிப்பதிவாளரை தேர்வு செய்திருந்தார். கிரிஷ் மகிஜா, கரண் தபிலியால் மற்றும் ஆனந்த் பன்சால், ஆகியோர் இவருடன் பணிபுரிந்திருந்தார்கள். 

தமிழ்நாட்டில் உள்ள யானைகள் முகாமில் உள்ள பொம்மன், பெல்லி குறித்து உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் அங்கு தான் வளர்ந்தேன். நான் ஊட்டியில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக நீலகிரியில் எனது பொருட்களை எடுத்துச்சென்றேன். அப்போது பொம்மன் தான் வளர்க்கும் ஆதரவற்ற யானை ரகுவுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். எனது ஆர்வத்தை கண்ட அவர் என்னை அழைத்தார். நானும் காரில் இருந்து இறங்கிச்சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். அவர்கள் ஆற்றுக்கு குளிக்கச்சென்று கொண்டிருந்தார்கள். எனது 3 வயது முதல் நான் அந்த சரணாலயத்திற்கு சென்று வருகிறேன். ஆனால் இந்த அனுபவம் வித்யாசமாக இருந்தது. அந்த மாலை வேளையில் நான் ரகுவுடன் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கினேன். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ரகுவுடன் பொம்மனுக்கு ஒரு சிறப்பான தொடர்பு இருந்தது. அது நான் இதுவரை பார்த்திராதது. 

எது உங்களை இந்த ஆவண குறும்படத்தை எடுக்க வைத்தது? 

அது இயற்கையாகவே நடந்தது. குறிப்பிட்ட ஒரு நிகழ்வால் அந்த எண்ணம் தோன்றவில்லை. நான் பொம்மன், பெல்லி மற்றும் ரகுவுடன் சேர்ந்திருந்து அவர்களின் நம்பிக்கையை பெற்றேன். அப்போது காடுகளில் சுற்றித்திரிந்தேன். அப்போது சிங்கங்களை பார்த்தேன், சிறுத்தைகளை எதிர்கொண்டேன். ஆனால் ரகுவுடன் நான் கழித்த பொழுதுகள் எனக்கு ஸ்பெஷலானவை. யானை குட்டியுடன் அருகில் இருந்து பழகியதால், அங்கிருந்து இந்த எண்ணம் தோன்றியது. அடிப்படையில் புகைப்படம், ஒளிப்பதிவு செய்பவள் என்பதை இந்த எண்ணம் தோன்றியது. 

ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து பொம்மனும், பெல்லியும் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம் அவர்களுக்கு ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அவர்களின் எளிமையான வாழ்க்கை, அவர்கள் அந்த யானை வளர்ப்பதில் காட்டும் ஆர்வம் என அனைத்துமே என்னை வியப்படைய வைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவர்களுக்கு தெரிவிக்கும் வாழ்த்துக்களை நான் அவர்களிடம் சேர்க்க வேண்டும். 

ரகுவும், அம்முவும் எப்படி உள்ளார்கள்? 

அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். ரகு இப்போது வளர்ந்துவிட்டார், சொல் பேச்சு கேட்கிறார். இருவருமே வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் குழந்தையாக இருந்தபோது சந்தித்தது. இப்போது இருவரும் வளர்ந்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இந்த பிணைப்பு எனக்கு வாழ்வின் எல்லை வரை கிடைக்கும். 

இந்தப்படத்தில் இருந்து மக்கள் என்ன எடுததுக்கொள்வார்க என எதிர்பார்க்கிறீர்கள்? 

வழக்கமாக படங்கள் விலங்குளுடன் இருப்பதால் மனிதர்கள் சரியாவதைப்போலோ அல்லது மனிதர்கள் விலங்குகளால் பாதிப்படுவதைப்போல் அல்லது காட்டு விலங்குகள் மக்கள் வாழிடம் விரிவடைந்ததால் பாதிக்கப்படுவதுபோல் காட்டுவார்கள். ஆனால், இந்தப்படத்ததில் வெளியுலகினர் தெரிந்துகொண்டதைவிட மனிதனுக்கும், யானை வளர்பவர்கள் குறித்து குறைவாக தெரிந்துகொள்வார்கள். அந்த மனிதர்கள் மற்றும் யானைகளை கண்ணியமாக இப்படம் சித்தரிக்கிறது. அவர்கள் யானைகளுடன் பல காலங்கள் வாழ்ந்தவர்கள். விலங்குகளை வேறு மாதிரி பாவிக்காமல் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. அப்பகுதியில் வாழும் நாட்டு மனிதர்களுக்கு ஆழமான பழங்கால அறிவு இருக்கும். அவர்களுக்கு நிலத்தின் மீது மதிப்பும், மரியாதையும் இருக்கும். அவர்களிடம் நாம் கற்க வேண்டியது அதிகம் இருக்கிறது. நிலத்தை அவர்கள் மதிப்பது மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்வது என அவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.   

IPL_Entry_Point

டாபிக்ஸ்