தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cauvery Issue : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Cauvery Issue : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Divya Sekar HT Tamil
Sep 21, 2023 12:06 PM IST

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவாக தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மற்றும் காவிரி ஒருங்காற்றுக் குழுக் கூட்டத்தில் காவிரி நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அரசுத் தரப்பில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்