தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Earthquake: நியூசிலாந்தில் 2 முறை நிலநடுக்கம் - பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Earthquake: நியூசிலாந்தில் 2 முறை நிலநடுக்கம் - பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 16, 2023 11:54 AM IST

நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள கெர்மடெக் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோளில் 7.1 என இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம்
நியூசிலாந்தின் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

இருப்பினும் இங்கு சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து, அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் நியூசிலாந்த நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் அறிவிறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி சார்ந்த எந்த எச்சரிக்கையும் அந்நிறுவனம் விடுக்கவில்லை.

நியூசிலாந்தின் அண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என ஆஸ்திரிலேயா நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IPL_Entry_Point