தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Mahila Congress Workers Protest At Jantar Mantar Against Bjp, Adani

Congress: அதானி குழும விவகாரம்: ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மகளிர் போராட்டம்

Manigandan K T HT Tamil
Feb 09, 2023 12:56 PM IST

Mahila Congress workers protest at Jantar Mantar: டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மகளிர் அணியினர் அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர்
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

நிதி முறைகேடுகள் மற்றும் சந்தை முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராக அகில இந்திய மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் வியாழக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர்.

'எங்களுக்கு பாஜக வேண்டாம் என்று இந்தியா சொல்கிறது,' 'எல்பிஜி சிலிண்டர் 1100 ரூபாய் என பசியால் வாடும் மக்களின் மீது பாஜக கருணை காட்டவில்லை,' மற்றும் 'பிஎம் மோடி மந்திரம்: பொதுமக்களிடம் இருந்து பறித்து, அதானிக்கு கொடுங்கள்' என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் பெண் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல போராட்டக்காரர்கள் இந்தியில் 'பணவீக்கம் இல்லாத இந்தியா' என்று எழுதப்பட்ட கருப்பு பட்டையை தலையில் அணிந்திருந்தனர்.

இதுகுறித்து மகிளா காங்கிரஸ் நீடா டிசோஸா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் இங்கு பணயம் வைக்கப்பட்டுள்ளதால், இது குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்த வேண்டும் என்று நீடா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை நாட்டின் பல பகுதிகளில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன் மாவட்ட அளவிலான போராட்டங்களை நடத்தியது.

அதானி குழுமம் மோசடியான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு விலையைக் கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை அதானி குழுமம் மறுத்துள்ளது.

எனினும், "அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி மற்றும் முன்னணி கடன் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது" என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்