தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nse தொலைபேசி ஒட்டுக்கேட்பு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

NSE தொலைபேசி ஒட்டுக்கேட்பு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

Manigandan K T HT Tamil
Feb 09, 2023 11:33 AM IST

Chitra Ramkrishna: தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி புகாரில் தற்போது சிக்கியுள்ளார் என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா.

என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா
என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா

ட்ரெண்டிங் செய்திகள்

என்எஸ்இ கோ-லொக்கேஷன் ஊழலில் சிபிஐயால் முன்னர் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, தற்போதைய வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தாலும் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

போன் ஒட்டுகேட்பு சதியின் பின்னணியில் உள்ளார் என்ற அடிப்படையில் தற்போதைய வழக்கில் அவரது ஜாமீன் மனுவை அமலாக்க இயக்குனரகம் (ED) எதிர்த்தது.

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் உள்ளிட்டோர் பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இவர்கள் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 - 2017 வரையில் கேட்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு எதிராக திட்டமிடப்பட்ட குற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை என்றும் வாதிட்டார்.

அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜஸ்மீத் சிங், "ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்தார்.

யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா?

தேசியப் பங்குச் சந்தையில் ஆரம்ப காலம் முதலே நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார். சிஇஓவாக ரவி நாராயண் ஆனபோது சித்ரா ராமகிருஷ்ணாவின் செல்வாக்கு அதிகரித்தது. 2013ஆம் ஆண்டு தேசியப் பங்குச் சந்தையின் 3வது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி புகாரில் தற்போது சிக்கியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்