தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Last Date To Apply For Net Exam

நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Priyadarshini R HT Tamil
Jan 17, 2023 10:34 AM IST

கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக எழுதப்படும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நெட் தகுதித் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://ugcnet.nta.nic.in/ இல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம்.

இணையவழி விண்ணப்பப்பதிவின்போது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, தேவையான ஆவணங்கள், ஒளிப்படம், கையொப்பம் ஆகியவற்றைப் பதிவு செய்து இறுதியில் கட்டணம் செலுத்தி வெளியேறவும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1100 விண்ணப்பக் கட்டணமும், இடபிள்யூஎஸ், ஓபிசி, என்சிஎல் பிரிவினர் ரூ. 500 கட்டணமும், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கை பிரிவினர் ரூ. 275 கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் முதல் கட்டத் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாவது கட்டத் தேர்வு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெற உள்ளன. இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in என்ற இணைய முகவரியில் தொடர்புகொள்ளலாம். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்