தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Japan Pm Fumio Kishida: ஜப்பான் பிரதமர் மீது பிளாஸ்டிக் குண்டு வீச்சு!

Japan PM Fumio Kishida: ஜப்பான் பிரதமர் மீது பிளாஸ்டிக் குண்டு வீச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 15, 2023 11:15 AM IST

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் சிதறி ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த போது, தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது தாக்குதல் நடந்த இடம்
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது தாக்குதல் நடந்த இடம் (TWITTER @AK2364N via REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

ஜப்பானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் கிஷிடா பாதுகாப்பாகவும், காயமின்றியும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

NHK வெளியிட்ட வீடியோ காட்சிகளில் பொதுமக்கள் தப்பியோடியதையும், சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்படுவதும் காட்டப்பட்டது.

ஜப்பானிய துறைமுக நகரத்தில் கிஷிடா ஒரு பொதுக்கூட்ட உரையை இன்று நிகழ்த்தவிருந்தார். அதற்காக அவர் வந்த போது தான், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. திடீரென மக்கள் கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் குண்டு, பிரதமரை நோக்கி வந்து அருகில் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் கிஷிடாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் அவருக்கு காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் சிதறி ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த போது, தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கிஷிடாவின் முன்னோடியான ஷின்சோ அபே என்பவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் நடைபெற்ற அரசியல் பிரச்சார பேரணி நிகழ்வில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்