தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hey Diaper Boy Shocking Video Viral

Gun Boy: அடேய் டயப்பர் பையா... பொம்மை இல்லடா துப்பாக்கி...! பதற வைக்கும் வீடியோ

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2023 11:24 AM IST

அமெரிக்காவில் டயப்பர் அணிந்த சிறுவன் துப்பாக்கியுடன் சுற்றி வரும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.

துப்பாக்கி ஏந்திய குட்டி பையன்
துப்பாக்கி ஏந்திய குட்டி பையன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையில் அவ்வப்போது அமெரிக்காவில் நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் மனித உயிர்கள் பலியாகுவது தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பீச் குரேவ் நகரத்தில் டயப்பர் போட்ட சிறுவன் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வலம் வருவது போன்ற காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் ஒருவன் துப்பக்கியுடன் முகப்பு அறையில் வலம் வருகிறான்.

அந்த வீடியோவில் சிறுவன் துப்பாக்கியை கையில் வைத்து முன்னும் பின்னும் ஆட்டியபடியும் அவ்வப்போது சுட்ட படியும் செல்கிறான். ஒரு முறை அவன் தன்னை நோக்கி சுடுவது போல் துப்பக்கியை காட்டுவது காண்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஆனால் சிறுவன் விளையாடிய அந்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்படவில்லை. இதனால் அவன் பல முறை சுட்டாலும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

இதை சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்த பெண் கண்காணிப்பு கேமரா வழியாக கவனித்து உள்ளார்.

அந்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்த அவர் இதனால் தான் இண்டியானாவில் இருக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய சோதனையில் மூலம் மூடப்பட்டு இருந்த மேஜையின் பின்புறம் சிறுவன் விளையாடிய துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் ஆத்திரம் அடைந்த 6 வயது சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத்தொடங்கினான். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனயில் அனுமதிப்பட்டார்.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு 610 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 2021ம் ஆண்டு 690 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் 610 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகின. அமெரிக்காவில் தொடர்ந்து அறங்கேறி வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பேசு பொருளாக மாறி உள்ளது. இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்