தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கர்நாடக தேர்தலில் 65 தொகுதிகளை கூட பாஜக தாண்டாது! அடித்து சொல்லும் சிவக்குமார்!

கர்நாடக தேர்தலில் 65 தொகுதிகளை கூட பாஜக தாண்டாது! அடித்து சொல்லும் சிவக்குமார்!

Kathiravan V HT Tamil
Mar 09, 2023 11:27 AM IST

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் (Arunkumar Rao)

ட்ரெண்டிங் செய்திகள்

மேலிம் பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோதும் பாஜக 40 இடங்களில் வென்றதை நினைவு கூர்ந்த அவர், பாஜகவுக்கு இம்முறை 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் அதையே கூறுகின்றனர் என்றார்.

நாங்கள் கிட்டத்தட்ட 75% இட ஒதுக்கீடு பற்றி ஆலோசித்துள்ளோம். அனைத்து இடங்களிலும் விரைவில் முடிவு எடுக்கப்படும், பின்னர் நாங்கள் அவற்றை கட்சி மேலிடத்திற்கு அனுப்புவோம் என சிவக்குமார் கூறினார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்றும், தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும் கூறினார்.

<p>கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை</p>
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொம்மை, தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சிக்கிறது, ஆனால் அவர்களின் சாதனை மோசமாக இருப்பதால் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point