தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Amazon Air: Amazon Air Service Has Arrived

Amazon Air: அமேசான் ஏர் சேவை வந்தாச்சு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2023 12:35 PM IST

இந்தியாவில் வேகமான பார்சல் சேவையை கருத்தில் கொண்டு அமேசான் ஏர் சேவை தொடங்கி உள்ளது

அமேசான் ஏர் சேவை துவக்க நிகழ்ச்சி
அமேசான் ஏர் சேவை துவக்க நிகழ்ச்சி (@MinisterKTR (Twitter))

ட்ரெண்டிங் செய்திகள்

உலகின் மிகப்பெரிய இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய இ காமர்ஸ் சந்தையில் அமேசான் ஏர் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. இந்த அமேசான் ஏர் சேவை பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கான டெலிவரிகளை இது சுமந்து செல்லும். வேகமான பார்சல் சேவைக்காக அமேசான் நிறுவனம் இந்த சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

அமேசான் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் 36 சரக்கு விமானங்களுடன் விமான பார்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதுவரை வட அமெரிக்கா, ஐரோப்பாவில் மட்டும் இருந்து வந்த ஏர் சேவையை தற்போது முதல் முறையாக இந்தியாவில் அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த அமேசான் ஏர் தொடக்க விழா கோலகலமாக ஹைதராபாத்தில் நடந்தது. அமேசான் நிறுவனத்தின் இந்த விழாவில் தெலங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் கலந்து தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய தெலுங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் ராமாராவ் , அமேசான் ஏர் திட்டம் தொடங்கப்பட்டதால் நிறைய கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் தங்களின் படைப்புகளை, தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச இ வணிக தளத்திற்கு கொண்டு சேர்க்க முடியும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும், அமேசான் நிறுவனத்துடன் தெலங்கானா கைத்தறி வாரியம் பேசி வருகிறது. அதன் மூலம் தெலங்கானா மாநிலத்தின் 56 கிராமங்களைச் சேர்ந்த 4500 நெசவாளர்களின் தயாரிப்பு நேரடியாக இத்தளத்தின் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். அமேசான் ஏர் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை விரைவில் பெற முடியும் என்றும் கூறினார்.

சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் பிராண்ட் பைனான்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள குளோபல் 500 அறிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில் இந்தியாவில் அமேசான் ஏர் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமேசான் நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் வழங்கி வந்த ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிறுத்தியது. அதே சமயம் அமேசான் தங்களது முக்கிய வணிகங்களான இ காமர்ஸ், ப்ரைம் வீடியோ ஆடியோ உள்ளிட்ட சேவைகளை துரிதப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point