National Investigation Agency: மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதுனாபூரில் என்ஐஏ குழு மீது தாக்குதல்-அதிகாரி ஒருவர் காயம்
NIA team attacked: மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதுனாபூர் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் வீட்டுக்கு 2022 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க என்ஐஏ குழு சென்றது. அப்போது அவர்கள் சென்ற வாகனம் மீது செங்கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதுனாபூர் மாவட்டத்தில் உள்ள பூபதிநகரில் சனிக்கிழமை காலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் 2022 குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க அதிகாரிகள் அங்கு சென்றபோது தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குழு தாக்கப்பட்டது.
என்ஐஏ குழுவின் கார் மீது செங்கற்கள் வீசப்பட்டு கண்ணாடியை சேதப்படுத்தியதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5.30 மணியளவில் உள்ளூர்வாசிகள் வாகனத்தை முற்றுகையிட்டு கற்களை வீசியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. என்ஐஏ அதிகாரிகளில் ஒருவரும் காயமடைந்ததாக கூறியுள்ளது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் குழு இரண்டு பேரை கைது செய்துவிட்டு கொல்கத்தாவுக்கு திரும்பிச் செல்லும் வழியில் வாகனத் தாக்குதலுக்கு உள்ளானது என்று அவர்கள் கூறினர்.
