தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Earthquake: திடீரென அடுத்தடுத்து குலுங்கிய கட்டடங்கள் - பீதியில் பொதுமக்கள்

Earthquake: திடீரென அடுத்தடுத்து குலுங்கிய கட்டடங்கள் - பீதியில் பொதுமக்கள்

Karthikeyan S HT Tamil
Feb 23, 2023 08:25 AM IST

தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் - கோப்புபடம்
நிலநடுக்கம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோ மீட்டர் தொலைவில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாக இல்லை . 

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானின் எல்லை பகுதியிலும் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 6.8, 5.0 மற்றும் 4.6 என பதிவாகி உள்ளன. சீனாவில் இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டராக பதிவு இருக்கிறது.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.0 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் அங்கு பீதியான மனநிலையே காணப்பட்டது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point