தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!

Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Apr 28, 2024 12:02 PM IST

Relationship : நமது உணர்வுகள் நமது கோணங்களையும் மாற்றுகின்றன. நமது உணர்வுகள் நமது எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் பார்வைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. நாம் நமது உணர்வுகள் தரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.

Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!
Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் நம் மனம் நமது அறிவுப்பூரைவமான முடிவுகளை அனுமதிக்காது. ஆனால் மனதை கட்டுப்படுத்தி நாம் அறிவை ஆதரித்தால்தான் நம் மன ஆரோக்கியம் மேம்படும்.

நமக்கு கிடைத்த மற்றும் நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் தான் நாம் நம் வாழ்வில் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் எண்ணங்கள் இருக்கும். எனவே நமக்கு உணர்வு ரீதியான விழிப்புணர்வு தேவை. அது நமது உணர்வுகள் எவ்வாறு நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.

இவற்றையெல்லாம் கடந்து நாம் நமது வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். நமது வார்த்தைகளை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே நமக்கு உணர்வுகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நம்முடைய உரையாடலும் நமது உணர்வுகளின் அடிப்படையில் அமையும் ஒன்றாகத்தான் இருக்கும். நமது வார்த்தைகள், நாம் அதை வெளிப்படுத்தும் விதம், நமது குரலின் டோன் என அனைத்தும் நமது அனுபவங்களின் அடிப்படையில் தான் அமையும். அனைத்துக்கும் நமது உணர்வுகளே காரணமாகும்.

நமது உணர்வுகள் நமது கோணங்களையும் மாற்றுகின்றன. நமது உணர்வுகள் நமது எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் பார்வைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. நாம் நமது உணர்வுகள் தரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.

கடுமையான உணர்வுகள் சண்டைகளை கையாளும் திறன்களை வளர்த்தெடுக்கும். பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக நாம், பிரச்னைகளை மோசமாக்கும் விஷயங்களை தேர்ந்தெடுக்கிறோம்.

எனவே நமக்கு சண்டைகளும் கையாளும் திறன் என்பது மிகவும் அவசியம். அதை கைகொள்வதற்கான உத்திகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு நமது உணர்வுகளின் வழியாக கிடைக்கும் அனுபங்கள் நமக்கு உதவும்.

நமது உணர்வுகள் நாம் முடிவுகள் எடுப்பதற்கு உதவும். நமது உணர்வுகள் நாம் முடிவு எடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நமது உணர்வுகளை கையாளும் கலையையும் நாம் கைகொள்ள வேண்டும்.

எந்த ஒரு உறவிலும், சுய விழிப்புணர்வு என்பது மிகவும் தேவை. உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கும், தேவையில்லை என முடிவெடுப்பதற்கும் நமக்கு தேவையான அறிவை வழங்குவது நமக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான்.

அறிவுக்கும், மனதுக்கும் எப்போதும் போராட்டம்தான் நடக்கும். ஆனால் மனதின் குரலை கேட்டால் நாம் நிம்மதியாக வாழ முடியும். ஆனால், அறிவின் குரல் நம்மை முன்னேற்றும். எனவே எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நம்மிடம்தான் உள்ளது. அதன் அடிப்படையில் உறவுகள் வலுப்பெறும் அல்லது பலவீனம் அடையும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்