Nayanthara - Vignesh Shivan Love Story: ‘நயன்தாராவை காதலிக்க உதவிய தனுஷ்’ - மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Nayanthara - Vignesh Shivan Love Story: நயன்தாராவை காதலிக்க நடிகர் தனுஷ் உதவியதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியுள்ளார்.
![Nayanthara - Vignesh Shivan love story: ‘நயன்தாராவை காதலிக்க உதவிய தனுஷ்’ - மனம் திறந்த விக்னேஷ் சிவன் Nayanthara - Vignesh Shivan love story: ‘நயன்தாராவை காதலிக்க உதவிய தனுஷ்’ - மனம் திறந்த விக்னேஷ் சிவன்](https://images.hindustantimes.com/tamil/img/2024/04/22/550x309/egawga_1713784730751_1713784739163.png)
Nayanthara - Vignesh Shivan Love Story: தனது காதலுக்கு நடிகர் தனுஷ், உதவி செய்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஆடைகளை அணிந்து, தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டனர்.
இந்த ஜோடி அவர்களின் சமீபத்திய போட்டோஷூட்டில் ஒன்றாக இனிமையாக கழித்த படங்களை, தங்களது ரசிகர்களிடம் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
நயன், விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள்:
நயன்தாரா இன்ஸ்டாகிராமில் ஏராளமான படங்களை வெளியிட்டார். அதைப் பகிரும்போது, இரண்டு வெள்ளை இதய எமோஜிக்களுடன் பகிர்ந்துகொண்டார். புகைப்படங்களில், நயன்தாரா ஒரு லாவெண்டர் சேலையில், வெள்ளி நகைகள் அணிந்திருந்தார். தலைமுடியில் மல்லிகைப்பூக்களை அணிந்து பிரமிக்க வைக்கிறார். விக்னேஷ் சிவன் ஒரு வெள்ளை சட்டை மற்றும் பாரம்பரிய வேஷ்டி அணிந்து, தனது மனைவி நயன்தாராவுடன் போஸ் கொடுக்கும்போது புன்னகைக்கிறார்.
விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் இருக்கும் இடத்தில் அழகான பசுமையான சூழல் இருக்கிறது. அப்போது திரைப்படத்தில் வருவதுபோல் ஸ்டில்களில் வழங்குகிறார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் கதைகளில் எழுதியுள்ள விக்னேஷ் சிவன், ‘’ ஒரு திருமணத்தில் பங்கெடுத்தபின், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்தவர்கள் போல உணர்ந்தோம். அந்த நாள் முழுக்க அப்படிதான் உணர்ந்தோம்’’ என்று இதயம் மற்றும் காதல் ஈமோஜிகளுடன் எழுதியிருந்தார்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் கதை!
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2015ஆம் ஆண்டில், ‘’நானும் ரவுடி தான்'' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனுஷ் அவர்கள் தான், காதலுக்கு மறைமுகமாக உதவினார். இந்த ஜோடி 2022ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது மற்றும் வாடகைத் தாய் மூலம் அதே ஆண்டில் உயிர், உலக் ஆகிய இரண்டு ஆண்குழந்தைகளைப் பெற்று எடுத்தனர்.
அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன், "தனுஷ் சார் என்னை நானும் ரவுடிதான் கதையை நயனிடம் (நயன்தாரா) சொல்ல வைத்தார். அது அவருக்குப் பிடித்திருந்தது. அவர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன், ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஆர்வம் காட்டாத நடிகர் விஜய் சேதுபதியை என்னால் நடிக்க வைக்க முடிந்தது. முதலில் அவர் எனது ஸ்கிரிப்ட்டைப் பற்றி நம்பவில்லை. ஆனால் நயன்தாரா, ‘நானும் ரவுடி தான்’படத்தில் ஒப்புக்கொண்டதை சொன்ன பிறகு தான், அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
படம் எடுக்கும்போது, நயன்தாராவுடன் நேரத்தைச் செலவிட எனக்கு அதிக நேரம் கிடைத்தது. ஒரு ஆண்டில் நாங்க இரண்டு பேரும் காதலிப்பதை உணர்ந்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தோம்’’ என்றார்.
நயன்தாரா ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலியின் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மொழியில் ’டெஸ்ட்’ என்கிற படத்திலும், 'மன்னான்கட்டி சின்ஸ் 1960’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் தற்போது ’லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ’’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
முன்னதாக, ’’போடா போடி’’ திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன பிறகு, ’’வேலையில்லா பட்டதாரி’’ படத்தில், பொறியாளர்களில் ஒருவராக நடித்திருந்தார், விக்னேஷ் சிவன். அப்போது அவருக்கும் தனுஷூக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்