தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ovarian Cancer : Warning Ladies The Easiest Way To Know If You Have Ovarian Cancer

Ovarian Cancer : எச்சரிக்கை பெண்களே! உங்களுக்கு கருப்பை புற்றுநோய் உள்ளதா? இந்த அறிகுறிகள் ஏற்படுகிறதா பாருங்க!

Priyadarshini R HT Tamil
Mar 19, 2024 03:00 PM IST

Ovarian Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றினால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு கருப்பை புற்றுநோய் இருக்கலாம்.

Ovarian Cancer : எச்சரிக்கை பெண்களே! உங்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்பதை அறியும் எளிய வழி!
Ovarian Cancer : எச்சரிக்கை பெண்களே! உங்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்பதை அறியும் எளிய வழி!

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர் வயிறு உப்புசம்

உங்கள் வயிறில் தொடர்ந்து உப்புசம் ஏற்படுவது. அதனுடன் வயிறு அசௌகர்யங்கள் அல்லது அழுத்தம் அடிவயிற்றில் ஏற்படும். இது கடுமையானதாக இருகுகும். உங்கள் அடிவயிற்றில் ஏற்படும் அளவு மாற்றத்தில் கவனம் செலுத்துங்கள். அது சில வாரங்கள் வரை நீடித்தால் உடனடியாக அதுகுறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.

வயிறு நிறைந்த உணர்வு

கொஞ்சம் உணவு உட்கொண்டவுடனே வயிறு முற்றிலும் நிறைந்த உணர்வு ஏற்படுவது, இந்த வயிறு நிறைந்த உணர்வு நீங்கள் எதுவுமே சாப்பிடவில்லையென்றாலும், தொடர்ந்து இருப்பது. இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் உடனடியாக இதுகுறித்து பரிசோதிக்க வேணடும். உங்கள் பசியில்லாமல் எப்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டால், கட்டாயம் அதில் பிரச்னை உள்ளது என்று பொருள்.

அஜீரண கோளாறு

அஜீரண கோளாறு, இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இதை நாம் ஓமத்திராவகம், சீரகத்தண்ணீர் போன்றவை குடித்து சரிசெய்து கொள்வோம் அல்லது சாப்பிடுவதை குறைத்துக்கொள்வோம். ஆனால் உங்களுக்கு தொடர்ந்து அஜீரண கோளாறு ஏற்பட்டால், அதை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கடுமையான இடுப்பு மற்றும் வயிறு வலி

பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்பு வலி என்பது பொதுவான ஒன்றுதான். ஆனால், தொடர் வலி மற்றும் கடுமையான, விளக்க முடியாத வலி இருந்தால் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமான மாதவிடாய் வலியைவிட இந்த வலிகள் வேறுபடும். இது மாதவிடாய் சுழற்சி முழுவதுமே எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். எனவே நீங்கள் இதன் மூலம் அது எந்த வலி என்று தெரிந்துகொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

வழக்கத்தைவிட அதிகமான முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது. அடிக்கடி சிறுநீர் முட்டிக்கொண்டே நிற்பது. இதுபோன்ற நேரங்களில் இடுப்பு வலி மற்றும் வயிறு உப்புசம் ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும். எனவே உடனடியாக இது கருப்பை புற்றுநோயால் ஏற்படும் அறிகுறிகளா என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொடர் பின் முதுகு வலி

முதுகு வலி பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒன்று. ஆனால் பின்புறத்தில் அடிப்பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அதுவும் குறிப்பாக போதிய ஓய்வுக்குப் பின்னரும் சரியாகாவிட்டால் அல்லது மற்ற பிரச்னைகள் தீர்வுகளும் பலன்கொடுக்கவில்லையென்றால், அதுகுறித்து உடனே கவனிக்க வேண்டும். கருப்பை புற்றுநோயால் சில நேரங்களில் முதுகுப்பகுதியின் அடியில் தொடர் வலி ஏற்படும்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றம், பல்வேறு பிரச்னைகளால் ஏற்படுகிறது. அதற்கு ஹார்மோன்கள் மாற்றமும் காரணமாகும். எனவே உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டால், மாற்றங்களை உடனே நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களின் மாதவிடாய் இல்லாத காலத்திலும் உதிரப்போக்கு ஏற்படும். வழக்கத்தைவிட அதிகமாக இருந்தாலும் உடனடியாக நீங்கள் அதில் கவனம் செலுத்துங்கள்.

எனவே, பெண்களே, நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு உங்கள் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கவனித்து, அதுகுறித்து அக்கறை செலுத்துங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்