தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Constipation During Periods Why Does Menstrual Constipation Occur What Can Be Done To Avoid It Here Are The Tips

Constipation During Periods : மாதவிடாய் கால மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 02:00 PM IST

Constipation During Periods : மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல், வயிறு உப்புசம் மட்டுமின்றி, நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஆகியவையும் ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படுத்தலாம். இதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படும். எனவே இவையனைத்து குறித்தும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Constipation During Periods : மாதவிடாய் கால மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!
Constipation During Periods : மாதவிடாய் கால மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதனால் உங்களுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஏற்கனவே மாதவிடாய் வலிகளுடன் மலச்சிக்களும் உங்களை படுத்தும். மாதவிடாய் காலங்களை ஏற்படும் மலச்சிக்கலை கையாளும் எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் செரிமான மண்டலம் மட்டுமல்ல, உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பத்துக்கு உதவும் ஒரு ஹார்மோன்தான் புரொஜெஸ்ட்ரோன், அது மாதவிடாய்க்கு முன்னர், உங்கள் கருப்பையை கர்ப்பத்துக்கு தயார்படுத்துகிறது.

மாதவிடாய் உங்கள் குடலின் உள்ளே ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் செரிமான மண்டலம் மெதுவான செரிமான வேலைகளை செய்வதால் மாதவிடாய் காலத்தில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாதவிடாய் காலங்களில் உணவு எடுத்துக்கொள்ளும் அளவு மற்றும் நீர்ச்சத்து அளவு குறையும். அதுவும் குடல் இயக்கத்தை பாதிக்கும். இதனால் உங்களுக்கு இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அது நார்ச்சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொள்வதை குறைத்து, உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம், வயிறு வலி, இதனால் குடல் இயக்கம் பாதிக்கப்படும்.

எனவே மாதவிடாய் காலங்களில் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்துக்கள் நிறைந்த உணவையும் அதிக சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துக்கள் மலத்தை இலக்கி, குடல் இயக்கத்தை முறையாக்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஏற்படும் அசவுகர்யங்களை குறைக்கிறது.

ப்ரோபயோடிக் அதிகம் கொண்ட உணவுகள்

ப்ரோபயோடிக் என்பது குடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பாக்டீரியாக்கள். அது செரிமானத்தை அதிகரித்து, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை குறைக்கும். அதிக ப்ரோபயோடிக்குகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. யோகட், கெஃபிர், கிம்சி, கொம்புச்சா, சடார், மெசரல்லா, பருப்புகள், டெம்ப் மற்றும் கவுடா சீஸ் போன்ற அதிக புரோபயோடிக்குகள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள்

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடனடியாக உணவு உங்கள் பெருங்குடலை சென்றடையும். மலத்தில் இருந்து உங்கள் உடல் உறிஞ்சும் தண்ணீரின் அளவை குறைக்கும். யோகா போன்ற மிதமான பயிற்சிகளை செய்து வயிறு உப்புசம், அசவுகர்யங்களை குறைத்து, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை போக்கலாம். தினமும் 45 நிமிட பயிற்சிகள் மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ரிலாக்ஸ் செய்வது

மனநிறைவுடனும், மன அமைதியுடனும் இருக்க பழகுங்கள். அதற்கு மூச்சுப்பயிற்சிகள் உங்களுக்கு உதவும். தியானம் செய்வது மனஅழுத்தத்தை குறைக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனஅழுத்தம் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதித்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செரிமானத்தை குறைக்கும் விஷயங்கள்

காஃபி நிறைந்த பானங்கள், பால் பொருட்கள், ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என எதுவும் உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதுவும் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தினாலே நீங்கள் மலச்சிக்கலை தவிர்க்க முடியும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசவுகர்யங்களை குறைக்க முடியும். இது ஒட்டுமொத்த உடல் நலனையும் அதிகரிக்கும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்களும் உங்களுக்கு நல்ல மலமிலக்கியாக செயல்படும். உங்களின் செரிமானத்துக்கு உதவும். நாள் முழுவதும் உங்கள் உடலில் ஏற்படும் அசவுகர்யத்தை தடுக்கும். அது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும்

தினமும் அதிகளவு தண்ணீர் பருகுவது உங்களுக்கு செரிமானத்தை எளிதாக்கும். எனவே அதிகளவு தண்ணீர் குடித்து, உங்கள் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துங்கள். இது உணவை உடைத்து செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கலை மாதவிடாய் காலங்களில் தடுக்கிறது.

மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல், வயிறு உப்புசம் மட்டுமின்றி, நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஆகியவையும் ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படுத்தலாம். இதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படும். எனவே இவையனைத்து குறித்தும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்