தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Marundhu Kulambu: அஜீரண கோளாறு, சளி இருமல், உடல் வலி இருக்கா.. பிரசவித்த பெண்ணா.. உங்களுக்கு தான் மருந்து குழம்பு

Marundhu Kulambu: அஜீரண கோளாறு, சளி இருமல், உடல் வலி இருக்கா.. பிரசவித்த பெண்ணா.. உங்களுக்கு தான் மருந்து குழம்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 13, 2023 09:30 AM IST

அஜீரண கோளாறு, சளி, இருமல், தொல்லை, உடல் வலி இருக்கா அப்ப உங்களுக்கு தான் இந்த குழம்பு. குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த குழம்பு உடலுக்கு வலுவூட்ட உதவும்

கமகமக்கும் மருந்து குழம்பு
கமகமக்கும் மருந்து குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மிளகாய் வத்தல் -6

சீரகம் - 1ஸ்பூன்

சுக்கு 2 துண்டு

மல்லி விதை -2ஸ்பூன்

கண்டந்திப்பிலி- 8 குச்சி

அரிசி திப்பிலி - 5 குச்சி

சித்தரத்தை - 2 குச்சி

அதிமதுரம்- 2 குச்சி

வால்மிளகு- 2 ஸ்பூன்

வசம்பு - 2 துண்டு

ஓமம் - 2 ஸ்பூன்

பரங்கி சக்கை- இரண்டு இஞ்ச் அளவு

புளி

வெங்காயம் - ஒரு கப்

பூண்டு- ஒரு கப்

தக்காளி - 2

கறிவேப்பிலை

நல்லெண்ணெய்

கடுகு

உளுந்தம்பருப்பு

பெருங்காயம்

வெந்தயம்

உப்பு 

மஞ்சள்

செய்முறை

ஒரு சிறிய ஆரஞ்சு அளவு புளியை எடுத்து சுடுநீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மிளகாய் வத்தல், சீரகம், சுக்கு மல்லிவிதை, கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, வால்மிளகு, வசம்பு, ஓமம் பரங்கி சக்கை, வசம்பு, போன்ற மருந்து பொருட்களை குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தில் சேர்த்த வறுக்க வேண்டும். அந்த பொருட்கள் நன்றாக வறுந்து வரும் போது வாசனை வர ஆரம்பிக்கும். மிதமான தியில் வைத்து வறுக்க வேண்டும். மருந்து பொருட்களில் சில சட சட வென வெடிக்க ஆரம்பித்த பிறகு ஒரு தட்டில் போட்டு ஆற விட வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் இரண்டு கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து சேர்த்து பொரிய விட வேண்டும். ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும். பின்னர் ஒரு கப் வெங்காயம் மற்றும் ஒரு கப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பூண்டு வதங்கிய பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி மசிந்தவுடன் அதில் புளியை கரைத்து வடிகட்டி சேர்த்து கொள்ள வேண்டும்.

அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

இப்போது வறுத்து ஆற வைத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்ய வேண்டும். அதை நன்றாக சலித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் சேர்த்து நன்றாக மூடி வைத்து விட வேண்டும். தேவையான போது குழம்பில் நீங்கள் இந்த பொடியை சேர்த்து கொள்ளலாம்.

இப்போது புளி வற்றி வர ஆரம்பிக்கும் போது மருந்து பொடியை 3 டேபிள் ஸ்பூன் வரை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடம் மூடி விட்டு மிதமான தீயில் வைத்து விட வேண்டும். எண்ணெய் பிரிந்த வர ஆரம்பிக்கும்போது கடைசியாக 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து இறக்க வேண்டும். இந்த குழம்பு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் நல்லது மேலும்.

WhatsApp channel

டாபிக்ஸ்