Sexual Issues : செக்ஸ் ஹார்மோன்களால் அவதியா பெண்களே? இதோ இந்த ஆயுர்வேத மூலிகைகள் உதவும்!
Sexual Issues : பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை சமமாக்கும் 6 ஆயுர்வேத மூலிகைகள் – பாலியல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறதுஉ

Sexual Issues : பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை சமமாக்கும் 6 ஆயுர்வேத மூலிகைகள் – பாலியல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது
உங்களுக்கு வயதாக ஆக செக்ஸ் வாழ்க்கை குறித்து கவலைகொள்கிறீர்களா? இதோ உங்கள் செக்ஸ்வல் ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்.
நம் உடலில் உள்ள அனைத்து வகை ஹார்மோன்களையும் சரியான அளவில் சுரந்தால் தான் பெண்களின் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். செக்ஸ் நலம் உள்ளிட்ட முழு உடல் நலனும் பாதுகாக்கப்படும்.
ஹார்மோன்கள் இனப்பெருக்க இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பாலியல் தூண்டுதல், ஆற்றல், மனநிலை அனைத்துக்கும் ஹார்மோன்களே காரணமாகின்றன. ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்போது, பெண்களுக்கு சிறந்த செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.