தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Herbal Soup That Removes Toxins From The Body

Herbal Soup: உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை சூப் செய்வது எப்படி?

Manigandan K T HT Tamil
Jul 23, 2023 05:37 PM IST

பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும்.

மூலிகை சூப்
மூலிகை சூப் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

ஹெர்பல் சூப்பில் நிறைந்துள்ள பயன்கள்:

  • சோர்வை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.
  • செரிமானம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது.
  • மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • உடலுக்கு வலுவளித்து ஊட்டமளிக்கிறது.
  • உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்கும்.
  • புத்துணர்ச்சி அளிக்கும்.

இப்படி எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ள ஹெர்பல் சூப் செய்யத் தேவையான பொருட்கள் என்னென்ன என பார்ப்போம்.

புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி-தேவையான அளவு

பாலக்கீரை அல்லது முருங்கை கீரை- தேவையான அளவு

மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன்

வெற்றிலை- ஒன்று

எலுமிச்சை பழச்சாறு- தேவைக்கேற்ப

உப்பு- தேவையான அளவு

இஞ்சி, பூண்டு- 5 முதல் 6 விழுதுகள்

ஓமம்- ஒரு சிட்டிகை

சோள மாவு கரைசல்- சிறிதளவு

எப்படி செய்ய வேண்டும்?

ஒரு குக்கரில் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, சீரகம், பாலக் கீரை அல்லது முருங்கை கீரை, வெற்றிலை, எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி மற்றும் பூண்டு, ஓமம், கிராம்பு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அதன் பின் அதில் சோள மாவு கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அதை இறக்கி வடிகட்டி அந்த சூப்பை எடுத்து சூடாக பரிமாறவும். இதில் மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

பூண்டு, கீரை, வெற்றிலை, எலுமிச்சை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்டவை இந்த சூப்பில் சேர்க்கப்படுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை எளிதில் நீங்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்