Sperm Count: ‘உடல் மட்டும் ரொம்ப சூடாச்சு..’விடாது துரத்தும் விறைப்புத்தன்மை பிரச்சினை! - இழந்த சக்தியை மீட்க என்ன வழி?
இது தவிர பல பெண்களுடன் புணர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டு விந்துவையும் வீணடிக்கிறார்கள். நாளடைவில் இது அவர்களை நரம்பு தளர்ச்சியில் தள்ளி விடும். இதன் காரணமாக திருமணத்திற்கு பின்னர் மனைவியை அவர்களால் முழுமையாக திருப்தி படுத்த முடியவில்லை.
இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இது குறித்து பிரபல மருத்துவர் யோக வித்யா பேசும் போது, “தற்போது உள்ள காலத்தில் பெண்களுக்கு கரு உருவாகவில்லை என்றால், உடனே அவர்களை மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், ஆண்களை பெரிதாக சோதிப்பதில்லை.
ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆண் தன்னுடைய மலட்டுத்தன்மையை சரி செய்யாமல், எத்தனை பெண்களோடு கூடினாலும், வாரிசானது உருவாகாது.
ஆகையால் சம்பந்தப்பட்டவருக்கு என்ன பிரச்சனை என்பதை முதலில் நாம் கண்டறிய வேண்டும். அதற்கான தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டும்
எதனால் ஆண்கள் மலட்டுத்தன்மைக்கு உள்ளாகிறார்கள் என்பதை பார்ப்போம். 19 வயதில் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். அதனுடைய வெளிப்பாடுதான் முகத்தில் பரு தோன்றுவது, துருதுருவென்று இருப்பது உள்ளிட்டவை. 21 வயதிலிருந்து 35 வயது வரை ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையானது அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் இப்போதுள்ள காலத்தில் அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் அவர்கள் அந்த காலகட்டங்களில் அவர்களது ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள, வேறு மாதிரியான கெட்ட பழக்க வழக்கங்களில் இறங்குகிறார்கள். புகை, மது, சுய இன்பம் உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
இது தவிர பல பெண்களுடன் புணர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டு விந்துவையும் வீணடிக்கிறார்கள். நாளடைவில் இது அவர்களை நரம்பு தளர்ச்சியில் தள்ளி விடும். இதன் காரணமாக திருமணத்திற்கு பின்னர் மனைவியை அவர்களால் முழுமையாக திருப்தி படுத்த முடியவில்லை. அதன் வழியாக உருவாகும் மன அழுத்தம், அவர்களது தூக்கமின்மைக்கு முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறது.
ஆண்கள் விறைப்புத்தன்மையை முதன் முறையாக பார்க்கும் பொழுது, சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள். காலப்போக்கில் அந்த இன்பமானது, அவர்களுக்குள் ஒரு பழக்கமாக மாறும். தனியாக இருப்பார்கள்; மெல்ல நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவார்கள். யாரிடமும் பெரிதாக பேச்சுக் கொடுக்க மாட்டார்கள்.
வெளியே படிக்கவோ, வேலைக்கோ செல்லும் போது, அவர்கள் பெரிதாக சத்துள்ள ஆகாரங்களையும் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பக்கம் சத்துள்ள ஆகாரங்கள் செல்லாத நிலை இருக்கும் சூழ்நிலையில் , இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக அவர்கள் விந்துவை வீணடித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு முடி கொட்டிப்போகும்.கண்களில் குழி விழும். ஞாபக மறதியானது உருவாகும். பெரிதாக தன்னம்பிக்கை இருக்காது. கை, கால் நடுக்கம், உள்ளங்கை உள்ளங்கால்களில் அதிகப்படியான வேர்வை உள்ளிட்டவை வந்து சேரும்
இதனையடுத்து அவர்கள் திருமணமே வேண்டாம் என்று பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதிலிருந்து நிச்சயமாக மீள முடியும். அதற்கு சில டிப்ஸ்களை நான் சொல்கிறேன்
உடல் சூடாக இருந்தால் உடலில் எந்த சக்தியுமே தங்காது. ஆகையால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிக மிக முக்கியமானது. இதற்கு வாரம் ஒரு முறை நீங்கள் நிச்சயமாக நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த குளியல் உங்களுக்கு பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கும்.
இது மட்டுமில்லாமல் ரோஜா குல்கந்தை காலை இரண்டு ஸ்பூன் இரவு இரண்டு ஸ்பூன் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும் பொழுது உடலுக்கு ஒரு விதமான பசைத்தன்மை கிடைக்கும். இது விதைப்பையை குழுமையாக வைத்திருக்கும். விந்து உற்பத்தியானது நன்றாக இருக்கும்.
குளிர்பானங்களை தவிர்த்து, நொங்கு, இளநீர் நீர் மோர் உள்ளிட்ட பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் கண் விழித்தலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒருநாள் அதிகாலையில் எழுந்து விட்டீர்கள் என்றால், இரவு சீக்கிரமாக தூக்கம் வந்துவிடும்
எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் 21 நாட்கள் அதனை தொடர்ந்து செய்யும் பொழுது, அது உங்களுக்கு பழக்கம் ஆகிவிடும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்