தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Food Adulteration : இந்திய மசாலா மற்றும் மருந்துகளில் கலப்படம் – பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!

Food Adulteration : இந்திய மசாலா மற்றும் மருந்துகளில் கலப்படம் – பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!

Priyadarshini R HT Tamil
Apr 26, 2024 05:38 AM IST

Food Adulteration : இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் (தயாரிப்பு நிறுவனங்கள்-MDH மற்றும் எவரெஸ்ட் குழுமங்கள்) ஆய்வின்மூலம் கலப்படம் இருப்பதை உறுதிசெய்த சிங்கப்பூர், ஹாங்காங் அரசுகள் அவற்றை தடை செய்துள்ளன.

Food Adulteration : இந்திய மசாலா மற்றும் மருந்துகளில் கலப்படம் – பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!
Food Adulteration : இந்திய மசாலா மற்றும் மருந்துகளில் கலப்படம் – பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

சிங்கப்பூர் அரசும், அதன் Food Agency பரிசோதனைக்குப் பிறகு, அதில் கலப்படம் இருந்தது உறுதியான பிறகு, அப்பொருட்களின் உள்ளூர் விற்பனையாளருக்கு, அப்பொருட்களை சந்தையில் இருந்து திரும்பப்பெற உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (FSSAI) MDH, எவரெஸ்ட் மசாலா பொருட்களை எடுத்து,அதில் புற்றுநோயை எற்படுத்தும் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகமாக உள்ளதா? என ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் (FSSAI), உணவு, மசாலாப்பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கு முன்னர் அதன் பாதுகாப்பையும், தரத்தையும் உறுதிபடுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் சந்தைக்கு வந்த பின்னர், அதுவும் அந்நிய நாட்டு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆய்வின் மூலம் கலப்படத்தை உறுதிபடுத்திய பின்னர், அப்பொருட்களில் கலப்படம் உள்ளதா? என ஆராய்வது காலம் கடந்த தாமதமான நடவடிக்கையாகும்.

இந்திய மருந்து குழுமங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்புகளில் எத்திலீன் கிளைக்கால், டைஎத்திலீன் கிளைக்கால் போன்ற சிறுநீரகங்களை பாதிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் இருந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகள் காம்பியா, உஸ்பெகிஸ்தான், கேமரூன் நாட்டில் பலியாகினர்.

இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், இந்த இறப்புகளுக்கு பின்னாவது இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகளின் தரத்தை மேம்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை.

செப்டம்பர், 2022ம் ஆண்டில் இந்தியாவில், Maiden Pharma நிறுவனத்தால், தயாரிக்கப்பட்ட கலப்படம் நிறைந்த இருமல் சிரப்பை உட்கொண்டு, 70 காம்பிய சிறுகுழந்தைகள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

உலக சுகாதார நிறுவனம், அந்த இருமல் சிரப்புகளை ஆய்வு செய்து, அதில் அளவிற்கு அதிகமாக நச்சுத்தன்மை கொண்ட டைஎத்திலீன் மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதை உறுதிசெய்தது.

சிங்கப்பூர், ஹாங்காங் போன்று உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், டிசம்பர் 22 முதல் ஜனவரி 23 இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில், நொய்டாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் சிரப்பிலும், கலப்படம் இருந்ததால், அதை உட்கொண்ட 68 உஸ்பெகிஸ்தான் சிறுகுழந்தைகள் பரிதபமாக பலியாயினர்.

இதிலிருந்து இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்பது தெளிவு.

உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிசெய்வது அவர்களது பணியாக இருந்தாலும், அதை செய்யாமல், வெளிநாடுகளுக்கு எற்றுமதியாகும் உணவுப்பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பது தனது வேலை அல்ல என FSSAI கூறியிருப்பதை எப்படி எற்க முடியும்?

2023ம் ஆண்டு அமெரிக்க Food and Drug Administration-FDA-எவரெஸ்ட்டின் சாம்பார் பொடியில், சால்மோனெல்லா (Salmonella) கிருமி இருந்ததை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியதால், அதை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

மசாலா/மருந்து பொருட்களை இந்திய அரசு அதிகளவில் ஏற்றுமதி செய்ய முற்படும்போது, தரத்தை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உறுதிசெய்யாமல், பின்னர் பிறநாடுகளில் ஆய்வின் மூலம் கலப்படம் உறுதிசெய்யப்படுவது, இந்தியப் பொருட்களின் தரத்தின் மீது சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.

இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து, மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்.

இந்திய சந்தையில் விற்கப்படும் போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற "சுகாதார"பானங்களில் மற்ற நாடுகளில் விற்பனையாகும் சர்க்கரை அளவை விட 3 மடங்கு சர்க்கரை அதிகமிருப்பதும், அதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், சர்க்கரைநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2023, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வின்படி, 11 சதவீத இந்தியர்கள் சர்க்கரை நோய், 35 சதவீத இந்தியர்கள் உயர் ரத்த அழுத்தம், 40 சதவீத இந்தியர்கள் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு (Abdominal Obesity) போன்ற பாதிப்புகள் உள்ளதும், அதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் (HFSS-High in Fat,Salt,Sugar) முக்கிய காரணம் எனத் தெரிந்தும், FSSAI, HFSS உணவுகளை "வரையறுக்கவோ" அல்லது "கண்டறியவோ"எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை எளிதில் கண்டறிய "Front-of pack Labelling"-FOPL உத்தியும், FSSAI ன் அலட்சியம் காரணமாக, அது இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

Jan Andolan மக்கள் இயக்கங்கள் வளர்ந்தால் தான் இத்தகைய நியாயமற்ற செயல்களுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் மாநில திட்டக்குழு, Heat Mitigation Strategy in Tamilnadu-அறிக்கையை 2023ல் வெளியிட்டாலும், தமிழக அரசு அதை வெளியிடவோ, செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தவோ முன்வரவில்ல. மக்கள் எழுச்சியே, இத்தகைய பிரச்சனைகளில் இருந்து மீள முதல் படிக்கல்லாக அமையும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்