Quit Smoking: புகைப்பழக்கத்தை நிறுத்தமுடியலையா? இதோ இந்த எளிய டிப்ஸ் பாலோ செஞ்சு பாருங்க
புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை நிறுத்த வேண்டும் என பலமுறை முடிவு எடுத்தாலும் அதை செயல்படுத்துவதில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பதோடு பல்வேறு உடல்நல பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். உடல் ஆரோக்கயத்துக்கு தீங்கு விளைவிக்கும் புகைபழக்கத்தை நிறுத்த வழிகள் இதோ

புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் பழக்கமாக மட்டுமில்லாமல் காலப்போக்கில் அது அடிமையாக்கிவிடும். இந்த பழக்கத்தினால் பல்வேறு கடுமையான உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும். கேன்சர் பாதிப்பு, நுரையிரல் நோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த பழக்கத்தை கைவிட பலமுறை முயற்சி செய்து விடமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். இதுபோன்று நம்மை அடியாக்கி பழக்கத்திலிருந்து விடுபட முக்கிய டிப்ஸ்களை கையாளலாம் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என முடிவு செய்தால் அதில் தீர்க்கமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக சில உணவு பழக்கங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிட்டா கரோடீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ சத்துக்கள் உள்ள பிரஷ்ஷான பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்
புகைப்பிடித்தல் சருமத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும். எனவே இதை தடுக்க காய்கறிகள் ஜூஸ்கள் எதுவும் சேர்க்காமல் பருக வேண்டும். இதன் மூலம் சருமம் பொலிவை பெறும்.
கோதுமை தவிடு, முழு பருப்பு வகைகள், சோளம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புகைப்பிடிக்கும் எண்ணத்தை உருவாக்காது. ஏனென்றால் இந்த உணவுகளில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளது
மீன், கொட்டை வகைகள், பச்சை நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் எடுத்துக்கொள்வதன் மூலம் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணன் தோன்றாது. அத்துடன் இந்த உணவுகள் உங்கள் சருமத்தையும் பாதுகாக்கும்
உணவு முறைகளை மீறி உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர வேண்டும். இவை உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்க உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்