தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Special Recipes: அல்சரைப் போக்கும் குடல் கத்திரிக்காய் சால்னா செய்முறை

Special Recipes: அல்சரைப் போக்கும் குடல் கத்திரிக்காய் சால்னா செய்முறை

I Jayachandran HT Tamil
Feb 26, 2023 09:37 AM IST

வித்தியாசமான ஆனால் சுவையான ஆட்டுக்குடல் கத்தரிக்காய் சால்னா செய்முறை பற்றி இங்கு காணலாம். இந்தக் குழம்பை சாப்பிட்டால் தீராத வயிற்றுப் புண் ஆறும்.

குடல் கத்திரிக்காய் சால்னா
குடல் கத்திரிக்காய் சால்னா

ட்ரெண்டிங் செய்திகள்

குடல் கத்திரிக்காய் சால்னா செய்யத் தேவையான பொருட்கள்

ஆட்டு குடல் முழுசு ஒன்று

வெங்காயம் - ஐந்து (பெரியது)

தக்காளி - நான்கு (பெரியது)

பச்சை மிளகாய் - 4

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 5 மேசை கரண்டி

கொத்து மல்லி - கால் கட்டு

புதினா - கொஞ்சம்

மிளகாய் தூள் – இரண்டரை தேக்கரண்டி

தனியா தூள் - இரண்டரை மேஜை கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

பட்டை, லவங்கம், ஏலம் தலா - இரண்டு

கத்திரிக்காய் - அரை கிலோ

கடலைப் பருப்பு - கால் கப்

குடல் கத்திரிக்காய் சால்னா செய்முறை-

குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.

கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்னை இல்லை.

சட்டியை காய வைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் குடலையும் போட்டு நல்ல பிரட்டி விடவும்.

பிரட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றி அரை மணி நேரம் குக்கரில் வேக விட வேண்டும்.

கடலைப் பருப்பை அந்த குக்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேக விடவும்.

வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ள இருக்கும் கடலைப் பருப்பை லேசாக மசித்து விடவும்.

பின்னர் கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குடலும் கத்திரிக்காயும் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும்.

சூடான சாதம், இட்லி, தோசை, இடியாப்பத்துக்குப் பிரமாதமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்